
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனின் மாவீரர் நாள் செய்தியை அடுத்து அவருக்கான பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்திருக்கும் நிலையிலும் ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கின்ற நிலையிலும் இவ்வாறான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தில் பல மாதங்களுக்கு முன்னர் பதவிக்காலம் முடிவடைந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமத்துக்கு இன்னமும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டி இருந்ததுடன் தனக்கு விடுக்கப்பட்டிருந்த உயிராபத்து எச்சரிக்கை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே விக்னேஸ்வரனின் பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்ந்துள்ளனர் என்று தெரியவருகிறது.