இலங்கையின் வடக்கு கிழக்கில் இன்றைய தினம் உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் யாழ், தீவுப்பகுதிகளில் ஒன்றான வேலணை, சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் இன்றைய மாவீரர் நாள் நினைவுகூரும் நிகழ்வில் கலந்துகொண்டு சுடரேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.