பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு புதிய வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியிருந்தது.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இதற்கு முற்றாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு குண்டு துளைக்காத லேண்ட் ரோவர் செண்டினல் வாகனங்களும் பிரித்தானியாவில் இருந்து நேரடி விமானத்தின் ஊடாக பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.