![]()
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பாரிய குற்றச் செயல்கள் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் விசாரணைகளை நடத்தி வந்த, பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி, உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
|
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுளள இணக்கப்பாட்டுக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, கொழும்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்கள் கீத் நொயார், உபாலி தென்னகோன், நாமல் பெரேரா, ஆகியோர் மீதான கொடூர தாக்குதல் சம்பவங்கள் குறித்து நிஷாந்த சில்வாவே விசாரணைகளை நடத்தி வருகிறார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான குற்றவாளியான நேவி சம்பத் என்ற சந்தன பிரசாதத் ஹெட்டியராச்சியை கைதுசெய்தமை மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ரவிந்திர விஜேகுணவர்தன, இந்த சந்தேக நபரை தலைமறைவாக வைத்திருந்தமை ஆகியவற்றை விசாரணைகளில் கண்டுபிடித்தமை அடுத்து நிஷாந்த சில்வா பரவலாகப் பேசப்பட்டு வந்தார்.
இந்த சம்பவம் தொடர்புடைய கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியை கைது செய்ய நிஷாந்த சில்வா முயற்சித்த போதிலும் உயர் மட்டத்தில் இருந்து அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற பல குற்றச் செயல்கள தொடர்பாக நிஷாந்த சில்வா, திறம்பட விசாரணைகளை மேற்கொண்டு சாட்சியங்களை திரட்டியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
|
மகிந்தவுக்கு நெருக்கடி கொடுத்த அதிகாரி மாற்றம்!
Add Comments