மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகியிருந்தது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் 2023 ஆகஸ்ட் மாதம் வேலன் சுவாமிகள், MK சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கானது நீண்டகாலமாக தவணையிடப்பட்டு வந்த நிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கிளிநொச்சி சட்டத்தரணிகள் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகினார்.
இந்த நிலையில் குறித்த வழக்கானது நீதவானால் கிடப்பில் போடப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில், இந்த வழக்கானது இன்றைய தினம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. எத்தனை வழக்குகள் வந்தாலும் இந்த மண் மீதான காதல் மாறாதது.