
வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இரு பிரதான கட்சிகளிற்கிடையில் ஏற்பட்ட அதிகாரபோட்டியே இவ்வளவு முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இரு பிரதான கட்சிகளுக்கிடையில் எற்பட்டிருக்கும் இந்த பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான விதத்தில் கையாளாமல் வெறுமனே ஜனநாயகம் மீறப்பட்டிருக்கிறது.
அரசியல் அமைப்பு மீறப்பட்டிருக்கிறது என்று கூறி அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் ஒரு கட்சியை அல்லது நபரை காப்பாற்றும் செயலையே எதிர்கட்சி தலைவரும் அவர் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சத்திய கடதாசியிலே கையொப்பம் இட்டு இந்த ஆட்சியில் இருக்கும் ஒரு தரப்பைக் காப்பாற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கொழும்பில் இருக்கின்ற ராஜதந்திர மட்டங்களோடு அணுகி மூன்றாம் தர மஸ்தியஸ்தத்துடன் இந்த பிரச்சினையை தீர்பதற்கான வல்லமையை தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வழங்கியிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் நலனுக்காக அதனை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
கடந்தவாரம் 14 நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்த எதிர்கட்சி தலைவர் வெறுமனவே இந்தநாட்டில் ஜனநாயகம் மீறப்பட்டிருக்கிறது என்பதை தான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தாரே தவிர பல வருடகாலமாக இரு பிரதான கட்சிகளும் தமிழ் மக்களிற்கு இழைத்திருக்ககூடிய அநீதிகளை பற்றியும் அரசியல் தீர்வு பற்றியும் எந்தவிதமான கவனத்தையும் செலுத்தவில்லை.
இறுதிப்போரின் போது நடைபெற்ற அவலங்களை நிறுத்துவதற்கு கொழும்பில் இருக்ககூடிய ராஜதந்திரிகளை அழைத்து பேசாத நிலையில் அதற்கு கொடுக்காத முக்கியத்துவத்தை இன்று ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாக எதிர்கட்சிதலைவரும் அவர்சார்ந்தவர்களும் பதறி அடிக்கின்றமை தமிழ்மக்களின் நலனை புறந்தள்ளி தமது பதவிகளை குறிப்பாக எதிர்கட்சிதலைவர் பதவியை காப்பாற்றவும் தமக்கு விரும்பியவரை பிரதமராக்கவுமே.
இன்று அரியதொரு சந்தர்ப்பத்தை தவறவிட்டிருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களாக தேசிய அரசாங்கத்துடன் தேனிலவு கொண்டாடிய எதிர்கட்சிதலைவரும், அவர்சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், காத்திரமாக செயற்பட தவறியிருக்கிறார்கள்.
எதிர்கட்சி தலைவர் முள்ளிவாய்க்காலிலே போராளிகளையும், மக்களையும் படுகொலைசெய்தபோது பார்வையாளனாக இருந்தார். கூட்டமைப்பு என்றபெயரை தமிழரசுகட்சி தனது சர்வாதிகார பிடியில் வைத்திருந்தமையின் விளைவே இன்று கூட்டமைப்பும் கூட்டமைப்பாக இல்லை.
தமிழர்களிற்கும் எந்த ஒரு தீர்வும் இல்லை. ஒட்டுமொத்தத்தில் எதிர்கட்சி தலைவரின் ராஜதந்திரம் படுதோல்வியடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.