
இதையடுத்து 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதியால் முன்னதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி இன்று 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கலகத்தடுப்பு பொலிஸார் மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்படும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது நாடாளுமன்றுக்கு வருகை தந்துகொண்டு இருக்கின்றனர்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளார். எனினும் ஜனாதிபதி இதுவரை வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.