அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்களும் இத
ற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளித்தது ஜே.வி.பி (3ஆம் இணைப்பு)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபாநகரிடம் இதனை சற்றுமுன்னர் கையளித்துள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று(2ஆம் இணைப்பு)
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று காலை இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றில் கட்சித்தலைவர்கள் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்!
கட்சித்தலைவர்களுக்கிடையிலான முக்கிய கூட்டம் ஒன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் இந்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடையுத்தரவை அடுத்து, நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது.
ஜனாதிபதியினால் கடந்த 4ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே தற்போது இடம்பெற்று வரும் கட்சித்தலைவர்களுடனான கூட்டத்தில் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.