கிழக்குப் பல்கலைக் கழக சௌக்கிய பராமரிப்பு பீட முன்றலில் ஆரம்பமான இப் பேரணி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியூடாக காந்தி பூங்கா வரை சென்று அங்கு கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. “அரசே காமுகர்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்று சக ஊழியர்களுடனும் மாணவர்களுடனும் கண்ணியமாக நடக்கத் தெரியாத காட்டுமிராண்டிகளை வீட்டுக்கு அனுப்பு அர சொத்துக்களை துஷ்பியோகம் செய்தவர்களை சிறைக்கு அனுப்பு ஊழல்வாதிகளை தப்பிக்க விடாதே ஊழல்வாதிகளின் தவறான வழில் சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய் ஊழல் புரிந்தவர்களை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிவிடு ஊழல் நிறைந்த கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அரசே உடனடி விசாரணை செய் ஊழல் அற்ற தூய்மையான பல்கலைக் கழகம் அமையும் வரை ஓயமாட்டோம் ஊழல்வாதிகள் பெற்றுக் கொண்ட அத்தனை சலுகைகளையும் மீளப்பெறு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏறந்திவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்! “இன்று நாம் ஒரு பாரிய சவாலுக்கான ஆரம்பத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இந்த சவாலை ஏற்று எமது அழைப்புக்கு ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த காலங்களில் பத்திரிகை வாயிலாகவும் ஊடகங்கள் ஊடாகவும் போராட்டங்கள் பகிஸ்கரிப்புக்கள் மற்றும் வெளியிடப்பட்ட அறிக்கைகள் வாயிலாகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலமைகளை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இது ஒரு தனி மனிதருக்கெதிரான போராட்டமல்ல என்பதை முதற்கண் தெரிவிப்பதோடு எமது பல்கலைக் கழகத்தை காலம் காலமாக சுரண்டிவரும்; ஒரு கொள்ளைக் கூட்டத்திடமிருந்தும் இந்த புனிதமான இடத்திலிருந்து கொண்டு மிகவும் கீழ்த்தரமாக கண்ணியமற்று கடைநிலை மனிதர்கள் போல் காடைத்தனம் பண்ணும் அதிகாரிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோருக்கு எதிரான ஒரு போராட்டம் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். இந்த வகையில் தான் தற்போதய ஆட்சி மாற்றத்தின் பின்னால் கௌரவ பிரதமர் அவர்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து ஊழல் புரிந்த பல்கலைக் கழகங்களுக் கெதிரான ஓர் விசாரணைக்குழு அமைக்கப்படும் போது எமது பல்கலைக் கழகத்துக்கும் அது நியமிக்கப்பட வேண்டுமென்பதோடு அது உடனடியாக அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்துவதே இந்த பேரணியின் நோக்கம் என்பதை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஊழலில் சம்பந்தப்படாத எவரும் வரப்போகும் ஆணைக்குழுவைக் கண்டு அஞ்சவேண்டியதன் அவசியம் என்ன என்பது தான் எங்கள் கேள்வி. உங்களில் யாராவது கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லையென கூறமுடியுமானால் சொல்லுங்கள் அதை நாங்கள் சவாலாக ஏற்றுக்கொள்கின்றோம். இல்லை! அங்கு பாரிய ஊழல்கள் நடந்திருக்கின்றன அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருப்பது மட்டுமல்ல பணத்தை இழந்த பழிவாங்கும் நோக்குடன் தவறான வழியில் பதவியை மானத்தை புலமைப் பரிசில்களை பதவி உயர்வை இழந்த எத்தனையோ பேர் காத்திருப்பதை நீங்கள் அறிய வேண்டும் அப்படி ஒரு விசாரணைக்குழு இங்கே வருமானால் நீங்கள் எல்லாவற்றையுமே கண்கூடாக பார்ப்பதோடு நாங்கள் கூறியது எவ்வளவு உண்மையென நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். கிழக்குப் பல்கலைக் கழகத்தால் பாரிய செல்வந்தர்களானவர்கள் பண்ணையார்கள் சொத்துக்கு வித்திருப்பவர்கள் பிழையான வழியில் நியமனம் பெற்றவர்கள் பிழையான வழிகளில் வெளிநாடு சென்றவர்கள் பதவி உயர்வு பெற்றவர்கள் மானபங்கப்பட்ட பெண்கள் பிழையான வழிகளில் திடீரென தங்களது சுயலாபங்களுக்காக திறமையான உத்தியோகத்தர்களை இடம் மாற்றியதென பாரிய ஊழல்கள் இங்கு அமைதியாக நடந்தேறியிருப்பது நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கொள்வனவில் கொள்ளை கொந்திராத்தில் கொள்ளை சிற்றூழியர் நியமனத்தில் கொள்ளை சிரமதானங்களில் கொள்ளை பொருள் வாங்கியதில் கொள்ளை கூட்டங்கள் நடாத்துவதில் கொள்ளை குடியிருக்கும் உத்தியோகஸ்த வாசஸ்தலங்களில் கொள்ளையென எத்தனை கொள்ளைகள் இந்த பல்கலைக்கழகத்தில். இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க மற்றவர்களுக்கு துப்பில்லாதபோது நாம் கேட்டது குற்றமா? அதற்காக எமக்கு தண்டனையா? இதை அனுமதிக்க முடியுமா? அன்பான உறவுகளே! அரசியல்வாதிகளே! கனவான்களே! கல்வி மான்களே சிந்தியுங்கள். ஊழல் இலஞ்ச ஆணைக்குழுவை வரவைப்போம் ஊழல்வாதிகளும் கொள்ளைக்காரர்களும் சிக்கட்டும் எமது புனிதமான கல்விக்கூடம் தூய்மையாகட்டும். இதுவே எங்கள் போராட்டம். நாங்களும் இந்த ஊழல்கழைப்பார்த்து கண்டும் காணாதவர்கள் போல இருக்க வேண்டுமா? நாமும் ஊழல்வாதிகளாக மாறி எமது மக்களுக்கு துரோகமிழைக்கவேண்டுமா? எமது சந்ததிகளுக்காக ஒரு கறைபடிந்த 3ம் தர ஊழல் பல்கலைக்கழகமொன்றை உருவாக்கி கொடுக்கவேண்டுமா? சிந்தியுங்கள் எமது அன்பான உறவுகளே! இந்த ஊழல்வாதிகள் தங்கள் சொத்துக்களைப் பெருக்கி சுகபோக வாழ்வை வாழ்ந்ததை தவிர என்ன செய்தார்கள்? கட்டிடம் கட்டியதை மட்டும் பெரிதாக சொல்லும் இவர்களால் ஒரு சதத்தையேனும் வெளியிலிருந்து வரவழைக்க முடிந்ததா? எல்லா பல்கலைக்கழகத்துக்கும் வழங்கப்பட்ட அதே அளவு நிதிதான் இங்கும் வழங்கப்பட்டது. அதுதவிர இவையெல்லாம் முன்னைய காலங்களில் தடுக்கப்பட்டதும் யுத்தத்தை காட்டி ஓரங்கட்டப்பட்டதுமாகும். இவர்கள்தான் திறமையானவர்கள் என்று கூறுக்கொள்வது உண்மையானால் இவர்களால் ஏன் இந்த கல்வித் தரத்தை உயர்த்த முடியாமல் போனது??? இதையெல்லாம் இவர்கள் சிறிதளவேனும் சிந்திக்கவேயில்லை. முன்னைய அரசாங்கத்தில் இருந்த அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பொடு கட்டிடத்துக்கும் ஆடம்பரமான வழைவுகளுக்குமே இவர்கள் முன்னுரிமை வழங்கியிருந்ததன் நோக்கம் என்னவென்று உங்களுக்கு புரியாமல் இல்லை. உழைப்பு எங்கேயோ அங்கேதான் அவர்களின் நாட்டமும் அக்கறையும் இருந்;தது. நாங்கள் ஒன்றைக் கேட்கிறோம். கட்டிடங்கள் குறைவாக இருந்தபோது இருந்த கல்வித் தரம் இப்போது இருக்கின்றதா? கட்டிடங்கள் குறைவாக இருந்தபோது இருந்த மாணவர் ஆசிரியர் ஊழியர் ஒற்றுமை தற்போது உள்ளதா? எந்த காலகட்டத்தில் அளவுக்கதிகமாக நிர்வாக மோசடி பற்றி அறிக்கைகளும் ஏன் மொட்டைக் கடிதங்காளக மனக் குமுறல்களும் வெளிவந்தது? ஏன் இவை எல்லாவற்றையும் விட தற்போதைய நிர்வாகத்திலேதான் ஏற்கனவே சீராக நடைபெற்ற விசேட கற்கை நெறிகள் மற்றும் முதுமானிப் பட்ட படிப்புகள் இல்லாமல்போனது இது தவிர 60 வீதம் விரிவுரைகளுக்கு சமூகம் கொடுத்தால் போதுமானதென தங்களது கதிரைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் மாணவர்களின் அறிவை மட்டப்படுத்தியது இதைப்போன்று எத்தனையோ திருகுதாள வேலைகளை இந்த நிர்வாகம் செய்திருக்கின்றதென்று உங்களுக்கு தெரியுமா??? இவையெல்லாவற்றையும் விட இன நல்;லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வையும் வளர்க்கவேண்டிய நிர்வாகம் மாணவர்களை தமிழ் சிங்களம் முஸ்லிம்கள் என தரம்பிரித்து கையாள்வதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?? எத்தனை திறமையான விரிவுரையாளர்களை இந்த நிர்வாகம் காட்டிக்கொடுத்து அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடியிருப்பதை நீங்கள் அறிவீர்களா?? இங்குள்ளவர்களில் எத்தனைபேர் கூனிக்குறுகி பயந்து நடுங்கி தங்கள் கடமைகளை செய்துகொண்டிருக்கிறார்கள் என நீங்கள் அறிவீர்களா?? எத்தனையோ அப்பாவிப் பெண் உத்தியோகத்தர்கள் தங்கள் மானம் போய்விடக்கூடாதென தங்கள் பதவிகளை ராஜினமா செய்திருப்பதும் இன்னும் சிலர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு சமூகத்தில் ஒதுங்கியிருப்பதையும் நீங்கள் அறிவீர்களா??? எத்தனையோ ஊழல்வாதிகள் மத்திய கணக்கு பரிசோதகர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு அவர்கள் தாங்கள் களவாடிய பல இலட்சம் தொகையை மீழக்கட்டவேண்டுமென கூறியும் அவை கட்டப்படாமலும் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலும் இருப்பதோடு அவர்களுக்கு பதவி உயர்வும் கௌரவமும் இந்த நிர்வாகம் வழங்கி அழகு பார்ப்பது உங்களுக்கு வேடிக்கையாய் இல்லையா?? இதுவா சீரான நிர்வாகம்?? இதுவா உங்கள் அபிவிருத்தி?? இவையெல்லாம் எங்கே அம்பலமாகிவிடும் என்ற பயமே நிர்வாகிகளின் இந்த கோழைத்தனமான பத்திரிகை அறிக்ககைகளுக்கும் தூதுகளுக்கும் காரணம். அன்பான உறவுகளே ஒன்றை மட்டும் தெளிவாக பொதுமக்களாகிய எங்களுக்கு என்ன விருப்பு வெறுப்புகள் இருக்கப்போகின்றது? நாங்கள் ஆசைப்படுவதெல்லாம் தரமான கல்வி சீரான நிர்வாகம் கண்ணியமான உத்தியோகத்தர்கள் பெண்களுக்கான மரியாதையும் பாதுகாப்பும் ஊழலற்ற அர்ப்பணிப்புடனான சேவையாற்றக்கூடிய நிர்வாகிகளும்தான். அவை கிடைக்கப் பெற்றிருந்தால் பொது மக்களாகிய நாங்கள் இப்படி வீதிக்கு வந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்குமா?? ஒரு கணம் சிந்தியுங்கள் எங்கள் அன்பான உறவுகளே!! இந்தப்போராட்டம் இப்போதுள்ள ஊழல்வாதிகளுக்கு மட்டுமல்ல இனிவரப்போகும் நிர்வாகிகளுக்குமான ஓர் எச்சரிக்கைதான். ஆகவே உறவுகளே தயவு செய்து எங்கள் போராட்டத்துக்கு கைகொடுங்கள் ஊழலற்ற தூய்மையான தரமான ஒரு பல்கலைக்கழகமாக எமது கிழக்குப் பல்கலைக்கழகத்தை நாங்கள் மாற்றி காட்டுகிறோம்” என தெரிவித்தனர். |
கிழக்கு பல்கலைகழகத்தில் ஊழல - மட்டக்களப்பு நகரில் கண்டன பேரணி
Add Comments