![]()
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, நாடாளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர் நவுவட் இதனை தெரிவித்துள்ளார்.
|
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் . நாடாமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம். அத்துடன் நல்லாட்சி ஸ்திரதன்மை பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
|
இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து - எச்சரிக்கிறது அமெரிக்கா!
Related Post:
Add Comments