நுகேகொடைப் பதியிலுள்ள முஸ்லிம்களை துண்டிவிடும் நோக்கத்துடன் நன்கு திட்டமிட்டமுறையில் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
“முஸ்லிம்களுடைய வீடுகளின் கதவுகள் மற்றும் சுவர்களில் நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. முஸ்லிம்கள்தான் இவர்களுடைய இலக்கு என்பது இதன் மூலம் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கின்றது” என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் மத்தியில் இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பில் அவர்கள் பொலிஸிலும் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள். பொலிஸார் முறைப்பாட்டைப் பதிவு
பொது பல சேனா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் ‘சிங்ஹ லே’ என்ற இந்தப் பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிகின்றது. சமூக வலைத் தளங்களில் ஆரம்பமாகிய இவர்களுடைய பிரச்சாரம் இப்போது அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
வாகனங்களில் பெருமளவு ஸ்டிக்கர் பிரச்சாரங்களையும் முன்னெடுக்கும் இவ்வமைப்பின் செயற்பாடுகளால் சிறுபான்மையின மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச உணர்வு எற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியிலேயே நுகேகொடையில் முஸ்லிம்களின் வீடுகளின் முன்பாக சிங்ஹ லே பிரச்சாரம் இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.