முகாம்களில் வாழும் மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் மீள் குடியேற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
690 ஏக்கரே விடுவிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில் 690 ஏக்கர் நிலபரப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது. 701.5 ஏக்கர் நிலப்பரவு விடுவிக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் 690 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்க பட்டு உள்ளன.
யாழில் உயர் பாதுகாப்பு வலயமாக 5ஆயிரத்து 710 ஏக்கர் உள்ளது.
இன்னமும் வலி.வடக்கில் 5 ஆயிரத்து 500 ஏக்கர் நிலபரப்பும் வலி.கிழக்கில் 210 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட வேண்டும்.
முகாம் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களின் காணிகள் எவையும் இதுவரை விடுவிக்கபப்டவில்லை . இடம்பெயர்ந்து 38 முகாம்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஜனாதிபதி யாழ் வந்த போது ஆறு மாத காலத்திற்குள் இந்த முகாம் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் என உறுதி வழங்கி இருந்தார்.
தற்போது விடுவிக்கப்பட்டு உள்ள பிரதேசங்களிலும் முகாம் மக்களின் காணிகள் விடுவிக்க ப்படவில்லை. ஜனாதிபதி உறுதி வழங்கியது போல கடந்த 25 வருட காலமாக முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சனைகள் மிக விரைவில் தீர்க்கப்படவேண்டும்.
அனைத்து மக்களையும் மீள் குடியேற்றம் செய்து விட்டு பொங்கல் விழாவை கொண்டாடுங்கள்.
முகாம்களில் வாழும் மக்களை மீள் குடியேற்றி இன்னமும் விடுவிக்க வேண்டிய 5 ஆயிரத்து 710 ஏக்கர் காணிகளையும் விடுவித்த பின்னர் பொங்கல் விழா போன்ற விழாக்களை கொண்டாடுங்கள்.
இப் பகுதியில் உள்ள மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் நிலையில் இவ்வாறன விழாக்கள் நடாத்துவது அந்த மக்களுக்கு வேதனையை தரும்.
எனவே மக்களை மீள் குடியேற அனுமதித்த பின்னர் இவ்வாறன விழாக்களை கொண்டாடலாம் என தெரிவித்தார்.