விஷேட அதிரடிப்படையினரின் பூரண பாதுகாப்புடன் ஆரம்பமான நிகழ்விற்கு 30பேருக்கு மேற்பட்ட பொலிசார் வீதி ஓரங்களிலும் நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தை சுற்றியும் பாதுகாப்பு கடைமையினை மேற்கொண்டு வருகின்றனர். நகரசபையினரின் காலாச்சார நிகழ்விற்கு இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கலாச்சார நிகழ்வினை நடாத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டுள்ளது எனவும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இதேவேளை முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விகினேஸ்வரனை வாழ்த்தி வரவேற்கும் பதாதை ஒன்று மண்டபத்திற்கு முன்பாக ஈரோஸ் அமைப்பு உரிமைகோரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த அரசியல் நோக்கம் கொண்டவையாக உள்ளனவா? என்ற சந்தேகத்தினை நிகழ்விற்கு வருகை தந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் வடமாகாண முதலமைச்சருக்கு பாதுகாப்புக்கள் அகற்றப்பட்ட நிலையில் இவ்வாறான நிகழ்விற்கு விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு ஏன் ஏற்படுத்தப்பட்டது என்ற கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
எழு நீ விருது வழங்கும் நிகழ்வினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.