
இதன் முதல் கட்டமாக 300 இற்கும் அதிகமான தமிழ் பணியாளர்கள் தன்னிச்சையாக பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவர்களிற்கான சம்பள கொடுப்பனவிற்கு நிதி ஒதுக்கீடு இல்லையென கூறியே பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் அனைத்து தொல்லியல் பணிகளை நிறுத்தி சிங்கள பணியாளர்களை களமிறக்கும் முயற்சியேயிதுவென தெரியவருகின்றது.
ஏற்கனவே மாவட்டத்தினை சேர்ந்த இலங்கை காவல்துறையினருக்கு தொல்பொருள் திணைக்கள சட்டஒழுங்கு சம்மந்தமான விரிவுரை ஒன்று கடந்த வியாழன்,வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் முல்லைதீவு காவல்நிலைய தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் யாழ்.மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட ஒழுங்கு சம்மந்தமாக காவல்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறை தொல்லியல் திணைக்கள பணிகளிற்கு இலங்கை காவல்துறை போதிய ஒத்துழைக்கவில்லையென தெரிவித்தே குறித்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.