வவுணதீவுச் சம்பவம் சாட்டாகிவிடக்கூடாது

தமிழகத்தைச் சேர்ந்த புலவர் இரா.சண் முகவடிவேல் கூறிய உண்மைக் கதை இது.
தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஊரில் இரவு வேளை விசமிகள் சிலரால் சில வீடுகள் எரியூட்டப்பட்டன.

வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பொலிஸார் இரவோடு இரவாகத் தேடுதல் நடத்தினர்.

அந்த ஊரில் உள்ள பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு நடுத்தர வயதுடைய ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார்.

பொலிஸார் அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அந்த நபரைப் பார்த்து நீ தானே வீடுகளை எரித்தாய் என்று பொலிஸார் அதட்டினர். 
எதுவும் அறியாத அந்த நபர் ஐயா! நான் இன்னொரு ஊருக்குப் போக வேண்டியவன்.
கடைசி பஸ்ஸைத் தவறவிட்டு விட்டேன். அதனால்தான் பஸ் நிலையத்தில் தங்கினேன் என்றான்.

அவன் கூறியதைச் செவிமடுத்த பொலி ஸார் அட! இது எங்களுக்கும் தெரியும். ஆனால் வீடு எரித்தவனைக் கண்டுபிடிக்கும் வரைக் கும் யாரையாவது நாம் கைது செய்ய வேண் டாமா என்ன?

அதனால் வீடெரித்தவன் அகப்படும்வரை நீ உள்ளே இரு என்றனர் பொலிஸார்.
இந்தக் கதைக்குள் நகைச்சுவை இருந்தா லும் அதற்குள் இருக்கக்கூடிய உண்மை அப் பாவிகள் தண்டிக்கப்படுகின்ற அநியாயம் நடந் தேறுகிறது என்பதுதான்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள லாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டனை பெற்று விடக்கூடாது என்பதுதான் நீதித்துறையின் தாரக மந்திரம்.
என்ன செய்வது, எத்தனையோ அப்பாவி கள் தண்டனை பெற; குற்றவாளிகள் தப்பித் துக் கொள்கின்ற சம்பவங்கள் நம் மண்ணி லும் தாராளமாக நடக்கின்றன என்பதை மட்டும் இவ்விடத்தில் கூறிக் கொள்கின்றோம். 

இவை ஒருபுறமிருக்க, நேற்று முன்தினம் மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூட்டுச் சம்பவங்கள் அறவே இல்லை என்ற நிம்மதியில் நாடு இருந்தவேளை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல் லப்பட்டனர் என்பது அதிர்ச்சிக்குரியது மட்டு மன்றி ஆய்வுக்குரியதாகும்.

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலி ஸார் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர் என்பதற் காக குற்றமற்றவர்களைக் கைது செய்வ தென்பது அச்சநிலையை மேலும் வலுப்படுத்து வதுடன் உண்மையான குற்றவாளிகள் தப்பித் துக் கொள்வதற்கும் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கும் வாய்ப்பாக அமையும்.

எனவே இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல் லப்பட்டுள்ளனர் என்பதற்காக முன்னாள் போராளிகளைக் கைது செய்கின்ற சம்பவங் கள் நடக்குமாயின் அதுபெரும் அநீதியாகும்.
ஆக, உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அதனூடு அச்சமற்ற சூழ் நிலையை ஏற்படுத்துவது பொலிஸாரின் தார்மிகக் கடமை யாக இருக்கும்  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila