
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பத்தாவது ஆண்டு இந்த 2019ஆம் ஆண்டு அது மட்டுமல்ல பயங்கவரவாத தடை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 40ஆவது ஆண்டிலேயே நாங்கள் காலடிவைக்கின்றோம்.
இவ்வாறு இன்று வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை எம். சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
கடந்த 40ஆண்டு காலமாக தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல அதுவே தமிழ் மக்களுடைய அரசியலையும் தமிழ் மக்களுடைய இருப்பையும் தமிழ் மக்களுடைய எதிர்காலத்தையும் சிறைக்குள் தள்ளியது என்று கூறினால் அது மிகையாகது.
இந்த அவலங்களுடன் நாங்கள் 2019ஆம் ஆண்டிலே காலடி வைத்திருக்கின்ற இந்த சூழ்நிலையிலேயே மன்னாரிலே தொடர்ச்சியாக அங்கே எலும்புக்கூடுகளை தோண்டியெடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
2009ஆம் ஆண்டு நாங்கள் சவங்களை கண்டோம் இப்போது எலும்புகளைக் கண்டு கொண்டிருக்கின்றோம். இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்?
இந்தப் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு இப்போது அதிகாரம் கையளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்றால் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே எதிர்காலம் இல்லை என்னும் செய்தியைத்தான் இவர்கள் கூறுகின்றார்கள்.
யார் இந்த யுத்தக் குற்றங்களுக்கு காரணமாக அடையாள படுத்தப்பட்டுள்ளார்களோ அவருக்கு இராணுவத்திலே உயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றால் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கூறுகின்ற செய்தி என்ன? நீங்கள் எங்களுக்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்கின்றீர்கள்.
ஜனாதிபதி அதைத்தான கூறுகின்றார். எங்களுக்கு எதிராக செயற்பட்டுள்ளீர்கள். இப்போது உங்களுக்கு எதிராக செயற்படுவதற்கு எல்லாவகையிலும் நாங்கள் ஆயத்தமாகியுள்ளோம் என்ற செய்தியைக்கூறுகின்றார்.
மகாவலி எல் வலயம் என்பதனூடாக காணிகளை அபகரிப்பதற்கு திட்டமிடுகின்றார். அதேபோல தொல்பொருள் திணைக்களம் காணிகளை அபகரிக்கின்றது.
வன இலகா திணைக்களம் காணிகளை அபகரிக்கின்றது. இதேபோல மீன்பிடித்துறை முகம் அமைச்சர் கரையோர பகுதிகளை கையகப்படுத்துகின்றார்.
இந்த சூழ்நிலையிலேயே இன்று வன்னி வாழ் மக்களுடன் அரசியல் பங்குபற்றலுடன் ஈடுபடுகின்ற மக்களாக சமூக அமைப்புக்களாக மக்களுடைய எதிர்காலத்திலே ஆர்வமுடைய நபர்களாக இன்று நாங்கள் ஒன்று கூடியுள்ளோம்.
இந்த முள்ளிவாய்க்கால் அவலத்தின் பத்தாவது ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் 40ஆவது ஆண்டு இவற்றின் எதிர்காலம் என்னவாக இருக்க வேண்டும் என இன்றைய தினம் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
இந்த கலந்துரையாடலின் போது இந்த வன்னி பிரதேசத்திலே வடக்கிலே தமிழ் மக்கள் மத்திலேயே இப்போது திட்டமிட்டு நடத்துகின்ற இன அழிப்புத் தொடர்பாக உரையாடியுள்ளோம்.
இந்த விடயத்திற்கு எதிராக நாங்கள் சிவில் அமைப்புக்களாக ஒன்ற சேர்ந்து இயங்கவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
இரண்டாவதாக தொடர்ச்சியாக மக்கள் சக்தியை கட்டியெழுப்பி இந்தக்கட்சி அரசியலிலேயே நம்பிக்கை வைக்காது அந்தக்கட்சி அரசியல் நடத்துகின்றவர்களுக்கு ஒரு அழுத்தம் கொடுக்க நாங்கள் செயற்படும் நோக்கியே இந்த வருடத்திலே நாம் தொடர்ந்து இயங்கவேண்டும். என்று நாங்கள் இன்றைய தினம் தீர்மானம் எடுத்துள்ளோம்.
அது மட்டுமின்றி தொடர்ச்சியாக புத்தி ஜீவிகளாக ஒன்று சேர்ந்து நடுநிலை அரசியலைப்பற்றியும் அடிமட்ட மக்களையும் அறிவுறுத்தி தெளிவுபடுத்தி அவர்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு இயக்கமாக செயற்படுத்திக் கொள்ளவேண்டிய திட்டத்திற்குள்ளே நாங்கள் இருக்கின்றோம்.
வன்னி நிலம் என்பது தமிழ் மக்களினுடைய பாரம்பரிய மண். இந்த மண் அபகரிக்கக் கூடாது. இந்த மண் யாருக்கும் சொந்தமாக்ககூடாது. எனவே இந்நிலையிலேயே எங்களுடைய அரசியலை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் எங்களுடைய மண் பாதுகாக்கப்பட வேண்டும்.
எங்களுடைய மண் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தமிழ் மக்களுடைய அபிலாசைகள் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படும். எனவே அதற்காக செயற்படவேண்டும்.
என்ற செயற்பாடுகளிலேயே தொடர்ந்து செயற்படுவோம் என்று இன்றைய கலந்துரையாடலில் செயற்படுத்தியுள்ளதுடன் தொடர்ந்தும் அச் செயற்பாடுகளில் ஈடுபடுவோம் என்று முடிவெடுத்துள்ளோம்.
எங்களுடைய போராட்டங்களை சிதைப்பதற்காக திட்டமிட்டு செயற்படுகின்ற அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இது போன்று வெளியிலிருந்து பணம் உழைக்கின்ற அமைப்புக்களும் இருக்கின்றன.
இவர்கள் தங்களுடைய கைகளிலேயே இப்போராட்டங்களை எடுக்கின்றார்கள். இடைநடுவில் கைவிட்டு விடுகின்றார்கள். இது அவர்களுடைய அரசியலுக்காக அதன் காரணமாகத்தான் நாங்கள் கூறுகின்றோம், இப்போது எங்களுடைய போராட்டங்கள் எல்லாம் சிதைந்துபோயிருக்கின்றன.
இந்த சிதைவிற்கு காரணம் தெற்கு அரசியல் மட்டுமல்ல எங்களுடைய தமிழ் மக்களுடைய அரசியல் தலைமைகள் என்று கூறிக்கொள்பவர்களும் இதற்கு காரணமாக இருக்கின்றார்கள் என்ற செய்தியையும் கூறிக்கொள்வதுடன் மக்களை தெளிவுபடுத்தி மக்கள் சக்தியாக கட்டியெழுப்பினால் மட்டுமே எங்களுக்கு எதிர்காலம் இருக்கின்றது.
அதற்காக போராட்டம் வடிவங்கள் இந்த அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலேயே எங்களுடைய வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருந்தது.
அந்தப் போராட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அமைந்திருந்தது. 2009ஆம் ஆண்டு வரை ஒருவிதமாகவும் பிற்காலத்தில் நாங்கள் எங்களுடைய போராட்டத்தின் வடிவத்தை மாற்றுகின்றோம்.
போராட்டம் மாறவில்லை. போராட்டத்தின் வடிவம் மாற்றப்படுகின்றது. இப்போராட்டம் மக்கள் அடிமட்ட மக்களை மையமாக வைத்து அவர்களைத் தெளிவூட்டி அவர்களுடைய சக்தியினால் தான் இது நடாத்தப்படும் என்ற செய்தியையும் கூறவிரும்புகின்றோம்.
மக்களுடைய சக்தியின்றி இப்போராட்டங்கள் இயங்க முடியாது. மக்கள் தான் போராட்டத்தின் சக்தி. எனவே கட்சி அரசியல் வாதிகளை எதிர்பார்ப்பதும் இதைத்தான். நாங்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே அவர்களை இயக்க முடியும்.
2009ஆம் ஆண்டு வரையிலேயே இயக்கம் கட்சிகளை இயக்கியது. கட்சிகள் இயக்கத்திற்கு பயந்து செயற்பட்ட ஒரு காலம் இருந்தது. இப்போது அந்நிலைமை மாறியுள்ளது.
அந்த நிலையை மக்கள் தங்களுடைய கைகளில் எடுக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு அந்த எதிர்பார்ப்பு மத்தியிலேயே இன்று ஒன்று கூடியவர்கள் ஒன்றாக இயங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளார்கள். இதுவே எங்களுடைய பாரிய வெற்றியாக கருதுகின்றோம்.
கட்சிகள் கட்சி அரசியலை நடாத்துகின்ற போது தங்களுடைய சுயத்திற்காக இயங்குகின்றார்கள் என்பதை தமிழ் மக்கள் மட்டுமன்றி இலங்கை பூராக அறிந்த விடயம் நாடாளுமன்றத்திலே இடம்பெற்ற குழப்ப நிலையை எடுத்துக்கொண்டால் பணத்திற்காக அங்கு எத்தனை பேர் செயற்பட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
கட்சிகள் தாவினார்கள் என்று தெரியும் மீண்டும் தமது பழைய கட்சிக்கு வந்து சேர்ந்தார்கள் என்று தெரியும். இவற்றிற்கு மத்தியில் தான் எங்களுடைய தமிழ்க்கட்சிகள் இயங்கி கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களும் அதே குட்டையில் ஊறியவர்கள் தான் எனவே இவர்கள் காலத்திற்குக்காலம் எங்களுக்குத் தெரியும் ஒவ்வொரு தை பிறக்கின் போதிலும் இந்த வருடத்திலே தீர்வுகள் கிடைத்துவிடும்.
அதேபோன்று தீபாவளி கொண்டாட்ட காலத்திலே தீர்வு வந்துவிடும் என்று கூறுவார்கள் ஜனவரி மாதம் முதலாம் திகதி பிறக்கின்ற போது தீர்வு வந்துவிடும்.
இதையெல்லாம் நம்பி ஏமாந்த தமிழ் மக்கள் தான் இருக்கின்றார்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள் எனவே அவ்வாறு வாக்களிக்கின்றவர்கள் இருக்கும் வரையிலேயே அவர்கள் அவ்வாறான ஏமாற்று அரசியலை செய்துகொண்டு தான் இருப்பார்கள்.
எனவே இப்போது சமூக எதிர்ப்பை உருவாக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. ஏனென்றால் 2009ஆம் ஆண்டிற்குப்பிறகு நடந்து கொண்டிருக்கின்ற இன அழிப்பு தீவிர தன்மையிலேயே உச்சக்கட்டத்திலே நாங்கள் இருக்கின்றோம்.
இந்த தன்மை இன்னும் தொடருமாக இருந்தால் தமிழ் மக்களுடைய எதிர்காலம் இருப்பு முழுமையாக கேள்விக்குள்ளாக்கப்படும். இந்த சூழ் நிலையிலேயே தமிழ் மக்களுடைய அரசியலை வடக்கு யாழ்ப்பாணம் தீபகத்திற்கு மட்டும் உள்ளடக்கத்தான் இப்போது தெற்கு அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள்.
நாங்கள் ஏற்கனவே வடக்கு, கிழக்கை இணைத்துதான் தமிழீழம் என்று எங்களுடைய எதிர்காலத்தை நாங்கள் பார்த்தோம். ஆனால் வடக்கையும் கிழக்கையும் பிரித்து விட்டார்கள்.
அது மட்டுமல்ல இப்போது வன்னியையும் யாழ்பாண தீபகற்பத்தையும் பிரிப்பதற்குரிய திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்.
இந்த பிரச்சினை வன்னி மக்களுடைய பிரச்சினையல்ல வன்னி மக்களுக்குத் தேவையானதெல்லாம் பொருளாதார அபிவிருத்தி மட்டும்தான் யாழப்பாண தீபகற்பத்தில் இருக்கின்றவர்கள் மட்டும் தான் அரசியல் கைதியாக இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் வன்னி மக்களுக்கும் தீபகற்பத்திற்கும் இடையே உறவு பலப்படுத்த வேண்டும். அதேபோல கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையிலேயே வன்னிக்கும் இடையிலேயே உறவு ஏற்படவேண்டும்.
அடுத்த கட்டமாக இதையே மலையகத்தில் நடைபெறுகின்ற போராட்டம் அவர்கள் வாழ்வுற்காகப் போராடி கொண்டிருக்கின்றார்கள்.
சம்பளத்திற்காகப் போராடி கொண்டிருக்கின்றார்கள் இப்போது பேசப்படுகின்ற விடயம் எல்லாம் அவர்கள் 1000ரூபா சம்பளத்திற்குப் போராடிக்கொண்டிருப்பது தான் ஆனால் அங்கு மலையகத்தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட இன அழிப்பு நடந்து கொண்டிருக்கின்றது.
இன அழிப்பின் ஓர் கட்டமாக தான் சம்பளப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. சம்பளம் கொடுக்க மாட்டேன் என்று சொல்கின்றார்கள்.
சம்பளம் கொடுக்க மாட்டேன் என்று கூறினால் அவர்கள் அப்பிரதேசத்தைவிட்டு வேறு பிரதேசங்களுக்கு போய்விடுவார்கள்.
இங்கு இராணுவத்தை கொண்டு நிலங்களைக் கையகப்படுத்து கின்றவர்கள் தொல்பொருள் திணைக்களத்தைக் கொண்டு நிலங்களை கையகப்படுத்தபவர்கள் வன இலாகாவினரை கொண்டு நிலங்களைக் கையகப்படுத்துபவர்கள் அங்கு தொழில் ரீதியாக ஒடுக்கப்பட்டு சம்பளம் கொடுக்கப்பட்டு அந்த மக்களை அந்த நிலத்திலிருந்து அகற்றி நிலக் கையளிப்பை கையகப்படுத்துகின்றார்கள்.
எனவே ஒடுக்கப்படும் மக்களோடு இன்னுமொரு ஒடுக்கப்படும் இனம் ஒன்று சேரவேண்டும் எனவே வன்னி மக்கள் வடக்கு மக்கள் கிழக்கு மக்கள் மலையகத்திலிருக்கின்ற மக்களுடன் ஒன்று சேரவேண்டும் அப்போது தான் எங்களுடைய போராட்டம் வெற்றிபெறும்.
இந்த உரையாடலை ஏனைய இடங்களுக்கும் கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கிளிநொச்சியில் இடம்பெறும் திருகோணமலையில் இடம்பெறும் மட்டக்களப்பில் எல்லா இடங்களிலும் நடாத்தத்திட்டமிட்டுள்ளோம்.
இந்த உறவு பலப்படுத்தினால் மட்டுமே எங்களுடைய ஒடுக்கப்பட்ட மக்களுடைய எதிர்காலம் விஷேடமாக இனரீதியாக தமிழ் மக்கள் தாக்கப்படுவார்கள்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பிரதம மந்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு கொண்டுவரப்பட்ட போது நாங்கள் 10கோரிக்கையை முன்வைத்திருக்கின்றறோம்.
அதிலே ஒரு கோரிக்கை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பானது என்று சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டார். யூலை மாதம் நாங்கள்
சம்பந்தன் அவர்களை அவருடைய எதிர்க்கட்சி பணிமனையில் சந்தித்போது எங்களுக்கு கூறிய விடயம் இன்னும் இரண்டு கிழமையிலேயே ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றோம்.
என்று கூறினார்கள் ஆனால் அவர்கள் அவர்கள் கதைக்கவில்லை அந்தச் சூழ்நிலையில் தான் வவுனியா சிறையிலிருந்த அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்ததை ஆரம்பித்தார்கள்.
அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த போது முன்வைத்த கோரிக்கை என்ன என்றால் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் போது அதற்கு எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும்.
எங்களுக்கு சாதகமான பதில் வழங்காவிட்டால் நான் அன்றும் கூறினேன் இன்றும் கூறுகின்றோம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா எம்முடைய அரசியல் கைதிகளை சந்தித்த போது அவர்களிடம் கூறியுள்ளார்.
இதனை நாங்கள் செய்வோம் என்று அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் அன்று அந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
அடுத்ததாக இந்த நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற குழப்பமான சூழ்நிலையின் போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மஹிந்த தரப்பினர் முயற்சித்தார்கள்.
அந்த சந்தர்ப்பத்திலலே மஹிந்த தரப்பினர் அரசியல் கைதிகளை சந்திப்பதிப்பதற்காக நாமல் ராஜபக்சா, காதர் மஸ்தான், வடக்கின் அரசியல் வாதி அங்கயன் இராமநாதன் போன்றவர்களை அனுப்புகின்றார்கள் அங்கு போய் கூறுகின்றார்கள் நாங்கள் உங்களை விடுதலை செய்வதற்காக ஆயத்தமாக இருக்கின்றோம்.
உங்களுக்காக உங்களுடைய விடுதலைக்காக பேசிக்கொண்டிருக்கின்ற அருட்தந்தை என்ற அமைப்பிலிருக்கின்றார் அவரூடாக நீங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று கூறினார்கள். அந்த அழுத்தம் கொடுக்கக்கூறியவர்கள் எங்களுடன் உரையாடவில்லை.
நாங்கள் நாமல் ராஜபக்சாவிற்கு செய்தி அனுப்பியிருந்தோம். அரசியல் கைதிகளுடன் பேசாது எங்களுடன் பேசுங்கள் நாங்கள் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்.
ஆனால் அவர்கள் எங்களுடன் உரையாட வரவில்லை மஹிந்த தரப்பினர் அவர்கள் ஒரு குழுவை கூட அமைத்தார்கள் விடுதலை செய்வதற்காக இந்த விடுதலை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழத்தேசியக் கூட்டமைப்பு கதைத்திருக்கின்றது.
ஜனாதிபதியுடன் கதைக்கின்றோம் என்று சொன்னார்கள். தமிழத்தேசிய கூட்டமைப்பினர் ஆனால் என்ன நடந்தது. இறுதியாக ஜனாதிபதி கூறுகின்றார்.
நாங்கள் விடுதலை செய்ய மாட்டேன் உள்ளே இருக்கின்ற அததனைபேரும் பயங்கரவாதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள். என்ற செய்தியைத்தான் கூறியிருக்கின்றார்கள்.
தற்போது நாங்கள் தமிழத்தேசியக் கூட்டமைப்பினரிடம் கேட்கின்றோம். நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக மைத்திரிக்கு அதரவு கொடுப்பதற்காக இந்தக் கோரிக்கையை கொண்டு செல்ல இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றாத சூழ்நிலையிலேயே நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் என்று கேட்கின்றோம்.
இது மக்களுடைய குறை மக்கள் வாக்களித்தார்கள் தங்களுடைய பிரதான கோரிக்கைகள் இவர்கள் செவிமடுக்க வேண்டும் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால் அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காணிகள் மீண்டும் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி வாக்களித்தார் அதனைச் செய்யவில்லை.
காணாமல் ஆக்கப்பட்வர்களுககு எதுவிதமான நீதியும் இல்லை. தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுத்திட்டம் கூட வராது என்ற திடமான ஒரு எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.
மஹிந்த தரப்பினர் கூறுகின்றனர் கொண்டுவரவிடமாட்டோம் என்று இப்போது இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்.
எனவே மக்களுடைய சக்தி இருந்தால் மட்டும் தான் இந்த அரசியல் வாதிகள் அரசியல் கட்சிகளை கேள்வி கேட்க முடியும் என்ற நிலையிலேயே இந்த மக்களை அமைப்புக்களை கட்டியெழுப்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.