
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணிக்கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. நல்லூர்க் - கோயில் வீதியிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்றுகாலை இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகிகள் நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.