திருகோணமலையிலுள்ள எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் வீடு அரச நியமனம் கோரும் பட்டதாரிகளால் இன்று முற்றுகையிடப்பட்டது. சம்பந்தனின் வீட்டுக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதாக இரா.சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வாக்குறுதி வழங்கியிருந்த போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
|
அதனைத் தொடர்ந்து சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டுள்ள அவர்கள் தமக்கு நியமனங்கள் கிடைக்கும்வரை தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கப்படப்போவதாக எச்சரித்துள்ளனர். இதன்போது சம்பந்தனும் தமிழரசுக் கட்சியினரும் அரசாங்கத்துடன் இணைந்து தமக்கான சுகபோகங்களை அனுபவித்துவருவதோடு தமது உறவினர்களுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டிய அவர்கள் சம்பந்தனின் வீடு முற்றுகையிட்டதைப்போன்று தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சியினரின் வீடுகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகத் தெரிவித்தனர்.
|
சம்பந்தன் வீட்டை முற்றுகையிட்ட வேலையில்லாப் பட்டதாரிகள்!
Related Post:
Add Comments