![]()
மன்னார்- சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி வளாகம் விரிவுபடுத்தப்பட்டு அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இன்று புதைகுழி வளாகத்தின் வெளிப்பகுதிகள் அனைத்தும் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு அகழ்வுகள் இடம்பெற்றன.
|
கடந்த ஒரு வார காலமாக வளாகத்தில் அடையாளப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தப்படும் பணிகள் குறைக்கப்பட்டு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில், சதோச வளாகத்துக்கு அருகாமையில் உள்ள கடைத் தொகுதிக்கு செல்லும் ஒரு பகுதி மூடப்பட்டு, விரிவுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. விரிவுபடுத்தப்படும் பகுதிகளில் மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது வரை 282 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 277 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றது.
![]() |
விரிவுபடுத்தப்பட்ட புதைகுழியில் மேலும் மனித எச்சங்கள்!
Related Post:
Add Comments