உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை (AL Exam) மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் (Department of Examinations) தீர்மானித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

குறித்த அறிவிப்பானது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் (Amith Jayasundara) இன்று (28.11.2024) வெளியிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையை நவம்பர் 30, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

எனினும் சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila