யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

 இந்திய கடற்றொழிலாளர்கள்  இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவதே அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார்.

வடமராட்சிக் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கருத்துத் தொரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை இறைமையுள்ள நாடு, அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (28) காங்கேசன்துறைக் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்வதற்காக கடற்படையினர் சுற்றிவளைத்து அவர்களின் படகுகுக்குள் ஏறியுள்ளனர்.

இவ்வாறு ஏறிய கடற்படையினரை படகுடன் இழுத்துச் செல்வதற்கு இந்திய கடற்றொழிலாளர்கள் தயாரானபோது அதனை தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Sl Navy Fires On Indian Fishermen Min Chandrasekar

இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம். இன்று நேற்று உருவான விடயம் அல்ல. பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வைக் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனெனில் மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள். எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று நாங்கள் பலமுறை இந்திய கடற்றொழிலாளர்களை தயவாகக் கேட்டுள்ளோம்.

அண்மையில் கூட நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப் படகுகள் அத்து மீறி உள் நுழைந்து அப்பகுதி கடற்றொழிலாளர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்குகின்றனர்.

நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாதுள்ளது என கூறுகிறார்கள்.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Sl Navy Fires On Indian Fishermen Min Chandrasekar

எமது மக்களை இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்கள் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக்காரணத்தினாலும் அனுமதிக்க முடியாது. எமது இலங்கை கடற்படை தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு.

கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன. இவை கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன.

ஆகவே இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது தேவையற்ற அனர்த்தங்களை தவிக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila