தமிழரசுக்கட்சிக்கு சட்டப்பயங்கரவாதியை தலைவராக்குவற்கு துணைபோபவராகத் தான் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) காணப்படுவார் என பிரித்தானியாவின் (Britain) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T. Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தலைவராக தன்னிச்சையான முடிவுகளை சி.வி.கே சிவஞானம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு காரணம் கட்டளைக்கு கீழ் பணியாற்றும் அரசனின் உதிரிப்பாகம் போலவே அவர் தொடர்ந்து செயற்படுவார்.
அமிர்தலிங்கத்தை அடுத்து தமிழரசுக்கட்சிக்கு தெரிவு செய்யப்பட்ட அணைத்து தலைவர்களும் ஆளுமையற்றவர்களாகவே உள்ளனர், ஊடகங்களில் அழுது, ஒப்பாரி வைப்பது ஆளுமை கிடையாது அது பிச்சை” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், தமிழரசுக்கட்சி தொடர்பிலான விரிவான கருத்துக்கள், உள்ளக அரசியல் உட்பூசல்கள் மற்றும் எதிர்கால அரசியல் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,