யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில்கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இப்போராட்டத்துக்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என செல்வராசா கஜேந்திரன் தரப்பு கூறியுள்ளது.
எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்டத்துக்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.