யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி
காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
“பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழிவிடு”, “சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று”, “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.