ஆதரவுக்கு கை கொடுங்கள் கூட்டமைப்பிற்கு மைத்திரி அழைப்பு


இன, மத பேதங்களைக் கடந்து பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்து வதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் காத்தான் குடி பிரதான வீதியில் நேற்று நடை பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன, மத பேதங்களை கடந்து சிங்கள, பௌத்த, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர், பறங்கியர் என அனைவரும் இந்தப் போராட்டத்தில் இணை ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக் கின்றேன்.

நாட்டை மீட்கும் இந்த பயணத் தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் மக்கள் அனை வரும் ஒன்று சேர்ந்து என்னோடு கைகோர்த்து நிற்பது எனக்கு மகிழ்ச் சியைத் தருகின்றது.


அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர் களின் ஒத்துழைப்பு இருக்கின்றது.

இந்த நல்ல பயணத்தில் நல்லாட் சியை ஏற்படுத்துவதற்காக எங் களோடு இணைந்து கொள்ளு மாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

இந்த நாட்டில் எல்லா இனமும் சமமானவர்கள். எல்லோருக்கும் அனைத்து சுதந்திரமும் உண்டு.

எல்லோரும் இணைந்து நல்லாட் சியை ஏற்படுத்துவதே நமது சேவை யாக இருக்கின்றது.

அவரவர் மதங் களை பின்பற்ற கலாசாரங்களை பின்பற்ற சுதந்திரம் இருக்க வேண் டும்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷவுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷவை ஒரு நல்ல மனிதராக கண்டோம். போர் முடிந்த பிறகு அவருடைய அத்தனை விட யங்களிலும் மாற்றத்தைக் கண்டோம்.

இன்று தன்னை ஜனாதிபதி யாக்கிய அத்தனை பேரையும் மறந்துவிட்டார். சிறிலங்கா சுதந்தி ரக் கட்சியின் கொள்கையோ, பண் டார நாயக்காவின் கொள்கையோ இன்று அவரிடத்தில் இல்லை.

அவரும் அவருடைய குடும்பமும் கொள்ளையடிப்பதற்கே இந்த நாட்டை பயன் படுத்திகின்றனர் என மேலும் தெரிவித்தார்.    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila