எங்கள் ஆட்சியிலும் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது!- மைத்திரி

எமது ஆட்சி வந்தால் ஒருபோதும் வட கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படமாட்டாது என்பதை மிகவும் ஆணித்தரமாக தெரிவிக்க விரும்புகின்றேன் என்று மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தத்தை வெற்றி பெறச் செய்த பல இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களையும் நாட்டுக்கு வரவழைத்து மென்மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் .
இன்னுமோர் பயங்கர வாதத்துக்கு நான் இடமளிக்கப் போவதில்லை. இந்த நாட்டை துண்டாடுவதர்க்கும் இடமளிக்கப் போவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி அழி­வு­களின் வடுக்கள் அர­சினால் இன்னமும் மாற்­றப்­ப­ட­வில்லை! எனது ஆட்­சியில் மாற்றம் உண்டு!- மைத்­திரி
நாட்டில் இயற்கை அனர்த்­தங்கள் மூலம் பேர­ழி­வு­களை நாம் சந்­திப்­பதற்கு காரணம் இங்கு ஒரு சிலரால் மேற்­கொள்­ளப்­படும் திட்­ட­மி­டாத அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களேயாகும். ஒரு தசாப்­தத்­திற்கு முன்னர் ஏற்­பட்ட அழி­வு­களின் வடுக்கள் அர­சாங்­கத்­தினால் இன்னமும் மாற்­றப்­ப­ட­வில்லை. எனது ஆட்­சியில் அனைத்­திற்கும் மாற்றம் உண்டு என மைத்­திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு காக்­கை­தீவு பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற சுனாமி நினைவு தின நிகழ்வில் கலந்­து­ கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
ஒரு தசாப்­தத்­திற்கு முன் நாட்டில் ஏற்­பட்ட மிக மோச­மான சம்­பவம் மக்­களின் மனங்­களில் இருந்து இன்­னமும் நீங்­காது உள்­ளது. பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் இலங்­கையில் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­தினால் மக்கள் பலர் சுமார் 40 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் உயி­ரி­ழந்­தனர். மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்­கப்­ப­டா­மையும் மக்கள் எதிர்­பா­ராத ஒரு தரு­ணத்­திலும் இவ்­வா­றா­ன­தொரு மோச­மான சம்­பவம் இடம்­பெற்று விட்­டது.
எனினும் சுனாமி அனர்த்தம் இடம்­பெற்று இன்று பத்து வரு­டங்­களை கடந்து விட்­டது. எனினும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எந்­த­வொரு நிவா­ர­ணமோ தேசிய ரீதியில் எந்­த­வொரு பாது­காப்பு நட­வ­டிக்­கையோ இடம்­பெ­ற­வில்லை.
சர்­வ­தேச நாடு­களில் அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­மாயின் அதற்கு முன் எச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் அதற்­க­மைய தொழில்­நுட்ப அவ­தான செயற்­பா­டு­களும் பயன்­ப­டுத்தி அனர்த்­தங்­களை தவிர்த்து கொள்ள முடி­கின்­றது.
எனினும் இலங்­கையில் அவ்­வா­றா­ன­தொரு எச்­ச­ரிக்கை செயற்­பா­டுகள் இல்லை. மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டு­மாயின் அர­சாங்கம் எச்­ச­ரிக்கை செயற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும். அவ்­வாறு இல்­லா­மையே தற்­போதும் மலை­யக பகு­தி­களில் தொடர் அனர்த்­தங்கள் ஏற்­பட கார­ண­மா­கி­யுள்­ளது.
எனவே எதிர்­வரும் 8ம் திகதி இவை அனைத்­தையும் வெல்லும் எமது புதிய யுகத்­தினை ஆரம்­பிப்போம்.
ரணில் உரையாற்றுகையில், இலங்­கையில் இடம்­பெற்ற ஆயுத மோதல் மற்றும் கல­வ­ரங்­களில் உயி­ரி­ழந்த உயிர்­க­ளுக்கு சம­மான உயிர்­களை சுனாமி பேர­லையில் தொலைத்து விட்டோம். சுனாமி அனர்த்தம் இடம்­பெற்று பத்து ஆண்­டுகள் கடந்­துள்ள நிலையில் மக்கள் இன்­னமும் இவ்­வ­ழி­வினை மறக்­க­வில்லை. பலர் இன்றும் உள­வியல் ரீதியில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
ஆயினும் கவ­லைக்­கி­ட­மான நிலை என்­ன­வெனில் அந்த மஹிந்த ராஜபக்ச அர­சாங்கம் தமது பத்து ஆண்­டு­களை அர­சாட்­சியில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வித நிவா­ர­ணங்­க­ளையோ உத­வி­க­ளையோ பெற்­றுக்­கொ­டுக்க மறந்து விட்டார்.
மக்­களை பற்றி சிந்­திக்­காது தமது குடும்ப அர­சி­யலை பற்றி சிந்­திக்கும் ஆட்­சிக்கு இனி­மேலும் இடம் கொடுக்­காது தூய்­மை­யா­னதும் மக்­களின் பாது­காப்­பினை பலப்­ப­டுத்தும் ஆட்­சியை உரு­வாக்க வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
இங்கு உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க குறிப்­பி­டு­கையில், 2004 ம் ஆண்டு சுனாமி அனர்த்­தத்­தினால் சுமார் 40 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான பொது­மக்­களும் 70 ஆயி­ரத்­திற்கு அதி­க­மான வீடுகள் மற்றும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெறு­ம­தி­யான சொத்­துக்கள் அழிந்­தன. அதேபோல் நாடும் மிக இறுக்­க­மான பொரு­ளா­தார வீழ்ச்சி கண்­டது.
ஆனால் அப்­போதே நாம் சர்­வ­தேச உத­வி­யுடன் நாட்­டினை மீட்­டெ­டுத்தோம். ஆனால் தற்­போது உள்ள நிலை­மையில் நாட்டில் அபி­வி­ருத்­தி­யினை கட்­டி­யெ­ழுப்­பவோ சர்­வ­தே­சத்­திடம் உத­வி­களைப் பெற்று பொரு­ளா­தார சமூக அபி­வி­ருத்­தி­யினை மேற்­கொள்ள முடி­யாத நிலை­மைக்கு நாடு மாற்­றப்­பட்டு விட்­டது.
உதவும் ஹம்­பாந்­தோட்டை எனும் திட்டம் உரு­வாக்­கப்­பட்டு சுனாமி உதவிகளை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்து இறுதியில் ஒரு சிலர் மட்டுமே அதில் பலனடைந்து கொண்டனர்.
உதவிக்காக சேகரிக்கப்பட்ட நிதி ஒரு சிலரின் பைகளை நிறைத்து விட்டது. இப்போதும் அதேநிலைமையே நாட்டில் தொடர்கின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும். அதற்காக வேண்டியேனும் மக்கள் இந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila