பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர் விவகார அமைச்ச என்ற ரீதியில் இவ்வான தாக்குதல் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 22ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிரில் மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.