ஜனாதிபதி பராக் ஒபாமா இவ்வார முற்பகுதியில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, இலங்கையில் ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். பிஸ்வால் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பான வலியுறுத்தலை இவ் விஜயத்தின் போது விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு இராஜாங்க செயலாளர் உட்பட திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன்பாக இந்த விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நிஷா பிஸ்வால் கடந்தாண்டு பெப்ரவரி மாத முற்பகுதியில் இலங்கைக்கு முதற்தடவையாக விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிநாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான விசாரணையில் போதிய முன்னேற்றம் காணப்படாமை தொடர்பில் சர்வதேசத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன் இதன்காரணமாக சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை சூசகமாக வெளியிட்டிருந்தார். இதேபோன்று நாட்டில் மோசமடைந்து செல்லும் மனித உரிமை நிலைமை மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் சட்டத்தின் ஆட்சியில் ஏற்பட்டுவரும் பலவீனநிலைமை குறித்தும் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |
வெள்ளை மாளிகையின் விசேட செய்தியுடன் அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் நிஷா பிஸ்வால்!
Related Post:
Add Comments