அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகள் நடுக் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சட்ட ரீதியானதே என்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் வழங்கி இருந்து தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அகதிகள் சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற 157 ஈழ அகதிகள், ஒருமாத காலப்பகுதி வரையில் கடலில் கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டமை சட்ட முறையற்ற செயல் என்று தெரிவித்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் நேற்று ரத்து செய்திருந்தது.
அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திட்டங்களுக்கும், அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு சட்டத்திட்டங்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகரித்திருப்பதாக, சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Add Comments