அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000 ரூபாவும் ஜூன் மாதம் மிகுதி 5000 ரூபாவும் அதிகரிக்கப்படும். கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதேவேளை, தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்துமாறு தனியார்துறை நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு தொடக்கம் 12.5 கிலோ கேஸ் சிலின்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்படும் எனவும் அதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். மண்ணெண்னை லீட்டருக்கு மேலும் 6 ரூபா குறைக்கப்படும் என்றும் அதன்படி 59 ரூபாவிற்கு மண்ணெண்னை ஒரு லீட்டர் கொள்வனவு செய்ய முடியும் என்றும் நிதி அமைச்சர் கூறினார். ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீனி கோதுமை மா பாண் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீனியின் ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினாலும் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 12.5 ரூபாவினாலும் 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 100 ரூபாவினாலும், பயறு ஒரு கிலோவின் விலை 40 ரூபாவினாலும், டின் மீனின் விலை 60 ரூபாவினாலும் உழுந்து ஒரு கிலோவின் விலை 60 ரூபாவினாலும் மாசி ஒரு கிலோ கிராமின் விலை 100 ரூபாவினாலும் காய்ந்த மிளகாயின் விலை 25 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது. இவ்வாறு பொருட்களுக்கான விலையை குறைப்பதனால் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைவடைகின்றது. எனினும் மக்களுக்கு நலன்களை வழங்கும் நோக்கில் இவ்வாறு சலுகைகள் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.பத்து பொருட்களின் விலைகளையே குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தோம். எனினும் 13 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். |
10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு, 13 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு! - மினி பட்ஜெட்டில் அதிரடி சலுகைகள்.
Related Post:
Add Comments