இழந்த பார்வையையும்- மக்கள் மீதான உணர்வையும் மீளப் பெற்றார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

"மக்களின் அனைத்து நிலங்களும் மீள கையளிக்கப்படவேண்டும்"
இழந்த பார்வையையும்- மக்கள் மீதான உணர்வையும் மீளப் பெற்றார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா:-
ஆட்­சி­மாற்றம் ஒன்றின் ஊடா­கவே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடியும் என்று வாக்­க­ளித்­துள்ள மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்­டத்­திற்கு நாம் ஆத­ர­வ­ளிப்போம்.
 
இதே­வேளை நீடித்த ஆட்­சி­யில்தான் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முடியும் என்று நாம் கேட்டுக் கொண்­டதை ஏற்று வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு எமது நன்­றி­யையும் தெரி­வித்துக் கொள்­கின்றேன்
 
புதி­தாக தெரி­வு­செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கும் புதிய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்கவுக்கும் எனது வாழ்த்­துக்­களைத் தெரி­விக்கும் அதே­வேளை எமது மக்­களின் முன்­னு­ரி­மைக்­கு­ரிய கோரிக்­கை­களை முன்­வைத்தே கடந்த அர­சாங்­கங்­க­ளுடன் நாம் பணி­யாற்றி வந்­துள்ளோம்.
 
முன்னர் முன்­வைத்த கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட்டு வந்­துள்­ளன. முழு­மை­ய­டை­யாத கோரிக்­கை­க­ளையும், செய்து முடிக்­க­வேண்­டிய கோரிக்­கை­க­ளையும் நீங்கள் நிறை­வேற்றித் தரு­வீர்கள் என்று நாம் நம்­பு­கின்றோம்.
 
இதே­வேளை குறிப்­பாக சில தமிழ் ஊட­கங்கள் எதிர்­கா­லத்­தி­லா­வது மாற்­றுக்­க­ருத்­துக்­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்க வேண்டும். அத­னூ­டா­கவே தமிழ் மக்­க­ளி­டையே கருத்­த­றியும் உரி­மையை பாது­காக்க முடியும்.ஈ.பி.டி.பி.யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கைகள் தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு நடை­முறைச் சாத்­தி­ய­மான வழியில் செல்­வ­தற்கு 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நடை­முறைப் படுத்­து­வதில் ஆரம்­பித்து, பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு­வுக்­கூ­டாக அதை மேலும் செழு­மைப்­படுத்தல்.
 
நீண்ட கால­மா­கவும் விசா­ர­ணைகள் இன்­றியும், குற்­றங்கள் நிரூ­பிக்­கப்­ப­டா­மலும், புனர்­வாழ்வு வழங்­கப்­பட்டும் சிறை­களில் வாடும் அனைத்து தமிழ் அர­சியல் கைதி­களையும் பொது மன்­னிப்பின் அடிப்­படையில் விடு­தலை செய்தல்.
 
மக்­களின் நிலம் மக்­க­ளுக்கே சொந்தம் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காகப் பாது­காப்பு வல­யங்­க­ளாக அறி­விக்­கப்­பட்ட தனி­யா­ருக்குச் சொந்­த­மான அனைத்து நிலமும் உரி­ய­வர்­க­ளிடம் மீள ஒப்­ப­டைத்தல் புலம்­பெ­யர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைத் தாய் நாட்­டி­னதும் பிர­ஜை­களாக இருப்­ப­தற்கு இரட்டைக் குடி­யு­ரி­மையை இல­கு­ப­டுத்தல்.
 
வடக்கு நோக்கிப் பயணம் செய்யும் மக்­க­ளுக்கு அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்தும் ஓமந்தைச் சோதனைச் சாவ­டியை முற்­றாக அகற்றல்.
 
வெளி நாட்­ட­வர்­களும், வெளிநாடு­களில் வாழும் இலங்கை மக்­களும் வட மாகாணம் நோக்கிப் பய­ணிப்­பதை தடுக்கும் அல்­லது நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் கட­வுச்­சீட்டு பரி­சோதனை முறை­மையை இரத்துச் செய்தல்.
 
யுத்த சூழலால் பாதிக்­கப்­பட்டு பொரு­ளா­தா­ரத்தில் நலிந்­து­போன மக்­களை தூக்கி நிமிர்த்த உத­வி­யி­ருக்கும் சமுர்த்திக் கொடுப்­ப­னவை மேலும் அதி­க­ரித்தல். சமுர்த்திப் பய­னா­ளி­களின் எண்­ணிக்­ கையும் அதி­க­ரிக்­கப்­ப­டுதல்.
 
யுத்­தத்­திற்குப் பின்னர் சொந்த வாழ்­விடம் திரும்­பிய மக்­க­ளி­னதும், மீள் குடி­யேற்றம் செய்­யப்­பட்ட மக்­க­ளி­னதும் வாழ்­வா­தா­ரத்தை மேலும் மேம்­ப­டுத்த உரிய திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல்.
 
யுத்த சூழலால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கில் வேலை­யற்று இருக்கும் எமது இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தகு­திக்­கேற்ப வேலை­வாய்ப்பை பெற்­றுக்­கொ­டுத்தல். சாத்­தி­ய­மான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு தொழில்­வாய்ப்­புக்­களை மேலும் ஏற்­ப­டுத்­துதல். சொந்தப் பொரு­ளா­தார வளர்ச்­சியில் எமது மக்கள் வாழுதல்.
 
எமது கடல் வளத்தை அழித்தும், சுரண்­டியும் எமது கடற்றொ­ழி­லா­ளர்­க­ளது வாழ்­வா­தா­ரத்தை சீர­ழிக்­கின்ற எல்­லை­தாண்­டிய மீன்­பி­டியில் ஈடு­ப­டு­கின்ற இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றலைத் தடுப்­ப­தோடு, எமது கடற்றொ­ழிலை புன­ர­மைப்புச் செய்து நவீ­ன­ம­யப்­ப­டுத்தி எமது கடறறொ­ழி­லா­ளர்­களது வாழ்வை மேம்­ப­டுத்தல்.
 
விவ­சாய, உள்ளூர் உற்­பத்­திகள் மற்றும் கைத்­தொ­ழில்கள் என்­ப­வற்றை ஊக்­கு­வித்து ஒவ்­வொ­ரு­வரும் சுய பொரு­ளா­தார வளர்ச்­சி­ய­டைய நிதி­வளம் மற்றும் உள்­ளீ­டு­களை வழங்­குதல்.
 
நிலத்­தடி நீர் மோச­மாகப் பாதிப்­ப­டைந்­து­வரும் யாழ். மாவட்டம் உட்­பட குடி­நீ­ருக்குப் பாரிய நெருக்­க­டியைச் சந்­தித்­து­வரும் வட மாகா­ணத்தின் மக்கள் அனை­வருக்கும் பொருத்­த­மான பொறி­முறை ஊடாக சுத்­த­மான குடிநீர் வழங்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தல்.
 
முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்­பி­னர்கள் உட்­பட ஏனைய அமைப்­புக்­களின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் திட்டங்கள் தேவை.ஆட்சி உரிமை (விசேட ஏற்பாடு) சட்ட திருத்தத்தை மீளாய்வுக்கு உட் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வட மாகாணத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமை உள்ளது.
 
முன்னாள் பொருளாதார அமைச்சின் விசேட நிதிக்கூடாக வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்குவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களில் இன்னும் இருபத்தி ஐந்து வீதமான பொருட்கள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அப்பொருட்களை உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila