கருணா, பிள்ளையான் ஆகியோரை அரசில் இணைக்கக் கூடாது! மட்டு. ஐ.தே.கட்சி மத்திய குழு

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிரணியினருக்கு பல்வேறு அட்டூழியங்களை செய்தவர்களை அரசாங்கத்தில் இணைக்கக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் ஐக்கிய தேசிய கட்சி மத்தியகுழு கூட்டம் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கல்குடா தொகுதி அமைப்பாளர் மாசிலாமணி, பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் ந.சத்தியசீலன உட்பட தொகுதி மற்றும் பிரதேச அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
கட்சியினை பலப்படுத்தி எதிர்கால செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லுதல் மற்றும் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன்,
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிள்ளையார், மோகன், அலிஸாகீர் மௌலான ஆகியோரை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்வாங்ககூடாது என்ற தீர்மானம் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொது எதிரணிக்குள் அவர்களை உள்வாங்குவதையும் இணைக்கக்கூடாது என்பதில் உறுதியாகவுள்ளோம்.
1978ம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் இருந்துள்ளனர்.இதனை மனதில்கொண்டு இந்த ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு பிரதிநிதியையாவது இந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த மூன்று தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு நாங்கள் வீதியில் நிற்க வேண்டிய நிலையேற்பட்டது. அவர்கள் வெற்றி பெற்றவுடன் ஆளும் கட்சியுடன் இணைந்து விடுவார்கள். இதன் காரணமாக எமது கட்சிக்கு பாரிய அநீயாயத்தினை விளைவித்தார்கள்.
18வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்துவதற்கு தமிழ் முஸ்லிம் வாக்குகளைக் கொண்டு மகிந்தவுக்கு இவர்கள் ஒப்புதல் அளித்தனர். இதன் மூலம் எவ்வளவு பெரிய துரோகத்தனத்தினை ரவூப் ஹக்கீம் அவர்கள் செய்தார்கள் என்பதை உணரவேண்டும்.
இந்த துரோகத்தனத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எந்த தமிழ் பேசும் இனமும் இடம்கொடுக்ககூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் ரவூப் ஹக்கீமுடனோ, றிஸாத் பதீயுதினுடனோ சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட தீர்மானித்த அந்த அரசியலில் இருந்து நாங்கள் ஒதுங்குவோம்.
எங்கள் கட்சிக்கு கூட்டணி நிச்சயமாகதேவை. நாங்கள் ஆட்சி அமைப்பது என்றால் எங்களுக்கு எப்பவும் ஒரு கூட்டணி தேவையாகும்.தமிழரசுக்கட்சியான முன்னைய காலம் தொடக்கம் ஐக்கிய தேசிய கட்சியுடனேயே இணைந்துள்ளது.
எனினும் இம்முறையும் ஆட்சியில் பங்கெடுக்குமாறு அழைத்த போதிலும் அவர்கள் பங்கெடுக்கவில்லை. நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சிய அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க முடியாது.முஸ்லிம் காங்கிரசுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியது. முதலமைச்சர் உட்பட அமைச்சுகளையும் வழங்கவும் இணக்கம் வழங்கப்பட்டது. ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எமது கட்சியினை சேர்ந்தவர்கள் காலம் காலமாக கட்சிக்காக பெரும்பங்காற்றியுள்ளனர். இவ்வாறான நிலையில் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கபீர் காசிம் உடனும் கதைத்துள்ளேன்.
ஐக்கிய தேசிய கட்சியில் அலிசாஹீர் மௌலான இருந்த காலப்பகுதியில் தமிழர்களுக்கு எந்தவித இடமும் இல்லாத நிலையிருந்தது. தமிழர்களின் வாக்குகளையும் பெற்று அவர் வெற்றி பெற்றார். அவர் எமது கட்சியில் இருந்து 2004ம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட பின்னரே ஐக்கிய தேசிய கட்சியில் தமிழர்களுக்கு இடம் கிடைத்தது.
நாங்கள் அன்று தொடக்கம் இன்றுவரை பொறுமையாகவே இருந்து வருகின்றோம். கட்சிக்குள் எந்த குழப்பத்தினையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று கட்சிக்குள் காவாலித்தனங்கள் அதிகரித்துள்ளன. தேவையற்றவர்களை உள்வாங்கியதன் காரணமாக இந்த நிலைமையேற்பட்டுள்ளது. இது நிறுத்தப்படவேண்டும்.
ஐ.தே.க.தலைவர் காடைத்தனங்களையும் சண்டித்தனங்களையும் விரும்பாத ஒரு ஆட்சியாளர். அந்த வழியிலேயே நாங்கள் செல்லவேண்டும்.கள்ளன் காவலிகளுடன் நாங்கள் அரசியல் செய்யமுடியாது. இவ்வாறானவர்களை இங்கிருந்து அகற்றுவோம். இனிவரும் காலத்திலாவது நல்ல ஆட்சியை ஏற்படுத்தவேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக வேண்டி செங்கலடியைச் சேர்ந்த க.மோகன், தேர்தல் இணைப்பாளராக மாத்திரம் நியமிக்கப்பட்டாரே தவிர அவர் எமது ஐக்கிய தேசியக் கட்சியின் செய்ற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அல்ல.
செங்கலடி க.மோகன் என்பவர் அவருடன் சிலரை இணைத்துக் கொண்டு எமது ஐக்கிய தேசியக் கட்சிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயற்பட்டு வருகின்றார்.
எனவே க.மோகனுக்கும் எமது ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு நிர்வாகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. செங்கலடி க.மோகனுக்கு ஜனாதிபதி தேர்தலுக்காக வேண்டி தேர்தல் இணைப்பாளர் என்றுதான் எமது தலைமையகத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்துவிட்டது அவருடைய நியனமும் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila