முதல் தடவையாக எனது வீட்டை சோதனையிட்டார்கள்! அரசியல் பழிவாங்கல் கூடாது- மகிந்த

1931 ம் ஆண்டிலிருந்த பரம்பரையாக அரசியலில் ஈடுபட்டிருந்தோம். ஆனாலும் முதல் தடவையாக எங்கள் வீட்டை சோதனையிட்டார்கள். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து மல்வத்து மகாநாயக்க தேரரான திப்பெட்டுவாவ சுமங்கல தேரரை சந்தித்துள்ளதோடு, அஸ்கிரிய மகாநாயக்க உடுகமபுத்தரஹித்த தேரரரையும் சந்தித்து ஒரு மணித்தியாலம் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசியவர் தன் வீட்டை சோதனையிட்டது தொடர்பாக பேசினார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எனது தந்தையின் காலம் முதல் எனது குடும்பம் அரசியல் செய்து வருகிறது. வெள்ளையர்கள் ஆட்சியிலும் நாம் அரசியல் செய்தவர்கள். 1931ம் ஆண்டு எனது தந்தை அரசியல் செய்தது முதல் இன்று வரை நாம் பல்லாண்டு காலம் தொடர்ந்து அரசியல் செய்கிறோம்.
ஆனால் எமது வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டதில்லை.தற்போதைய ஆட்சியில் எனது வீடு சோதனை செய்யப்பட்டது. ஆனால் அங்கு எதுவும் இருக்கவில்லை. எமது நாட்டைப் பொறுத்தவரை இதனை விட உயர்ந்த ஒரு அரசியல் கலாச்சாரமும் அரசியல் ஒழுக்கமும் தேவைப்படுகிறது.
எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை நாம் எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம். யாரும் மனம் தளரத் தேவையில்லை. சற்று பொறுமையாக இருக்கும்படி வேண்டுகிறேன் என்றார்.
1931ம் ஆண்டிலிருந்த பரம்பரையாக அரசியலில் ஈடுபட்டிருந்தோம். ஆனாலும் முதல் தடவையாக எங்கள் வீட்டை சோதனையிட்டார்கள். சோதனையிட்டு கண்டுபிடித்ததொன்றும் இல்லை.
களுத்துறை, அகலவத்தை சம்பவங்கள் மூலம் அரசியல் பழிவாங்கல் நிகழ்வுகள் வெளிகாட்டப்படுவதாகவும் 1931ம் ஆண்டில் இருந்து அரசியல் செய்யும் தங்களுக்கு முதல் தடவையாக வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி மக்கள் இதனை எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் தேவைக்காக தான் எப்போதும் முன்நிற்பதாக மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது கூடாது என்றும் அரசியல் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila