யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ விசேட செயற்றிட்டம்


வடக்கு மாகாணத்திலுள்ள மாவீரர், முன் னாள் போராளிகள், தமிழ் அரசியல் கைதி கள் குடும்பங்களுக்கு உதவும் விசேட செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மேற்படி வகைக்குட்டபட்டவர்களின் குடும்பங்கள் எதிர் வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்ன தாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப் படுகின்றது.

இப் பதிவுகளை கிராம சேவையாளரின் அத் தாட்சியுடன் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களி னூடாக விண்ணப்பிக்குமாறும் வடக்கு மாகாண சபையின் மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ் வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்.நகரிலுள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்றுப் பிற்பகல் 3.30 மணியள வில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அந் தச் சந்திப்பில் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழினத்துக்காக தம் உயிரை நீத்து எம் உயிர் காத்த மாவீரர்கள், போராளிகள் என்றும் மறக்க முடியாதவர்கள்.

இவர்களின் தியாகங் களின் ஊடாகத் தான் நாம் தற்போது இந்த நிலையில் என்றாலும் உள்ளோம். எமது விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்தவர் கள் என்றுமே எங்கள் மனங்களில் உயர்ந்த நிலையிலையே இருக்கின்றனர்.

ஆகவே மாவீரர், போராளிகள் அரசியல் கைதி களின் குடும்பங்கள் வடக்கு மாகாணத் திலுள்ள 1145 கிராம அபிவிருத்திச் சங்கங் கள், 1157 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களில் மேற்படி ஒவ்வொரு தரப்பினர்க ளுக்கும் தனித்தனியே இருக்கின்ற விண் ணப்பப் படிவங்களைப் பெற்று தமது கல்வித் தகைமை விசேட தகைமை உள்ளிட்ட இருக் கின்ற விசேட தகைமைகளைக் குறிப்பிட்டு கிராம சேவையாளரின் அல்லது கிராம அபி விருத்தி உத்தியோகத்தர் உறுதிப்படுத்தலுடன் அந்தந்த மாதர் கிராம அபிவிருத்தி சங்கங் கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகிய வற்றினூடாக விண்ணப்பிக்க முடியும்.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வுள்ள இத் திட்டங்கள் மேற்படி 3 பிரிவினர்க ளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங் கப்பட உள்ளதோடு அவயவங்களை இழந்தவர் கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஆகவே இதற்கு உள்நாட்டிலுள்ள வர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பினர்களும் ஒத்துழை ப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் டெனீ ஸ்வரன் மேலும் தெரிவித்தார்.    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila