மகிந்தரின் கடந்த கால செலவுகள் வெளியானது….

ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.
இலங்கையர்களுக்கு ஆகக்கூடுதலான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பமாக இது அமையும்.
எமது இனத்துக்கு கௌரவமாக சேவையளிப்பதே எங்கள் பொறுப்பாகும்.
நல்ல எதிர்காலத்துக்காக மாற்றங்களை ஏற்படுத்துவோம்.
வென்றெடுத்த சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும்.
ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.
மக்கள் சேவையை மக்கள் சேவையாகவே கொண்டு நடத்துவதற்கு நாம் முன்னிற்போம்.
சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை.
ஜனாதிபதி பதவியேற்புக்கு 6,000 ரூபாய் மட்டுமே செலவு.
அமைச்சரவையை 71 இலிருந்து 31ஆகக் குறைத்தோம்.
கடந்த வரவு – செலவும் திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபாய், வரி வருமானமாக எதிர்ப்பார்க்கப்பட்டது.
கடந்த வரவு – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 521 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த தேசிய உற்பத்தியின் 4.6 சதவீதமாகும்.
ஹெஜின் ஒப்பந்தமே நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது.
ஜனாதிபதியின் செலவு விவரங்கள்
2008ஆம் ஆண்டு-634கோடி ரூபாய்
2009ஆம் ஆண்டு- 765 கோடி ரூபாய்
2010ஆம் ஆண்டு- 5063 கோடி ரூபாய்
2011ஆம் ஆண்டு- 5,063 கோடி ரூபாய்
2012ஆம் ஆண்டு- 5,936 கோடி ரூபாய்
2013ஆம் ஆண்டு- 6,244 கோடி ரூபாய்
2014ஆம் ஆண்டு- 10,497 கோடி ரூபாய்
2015ஆம் ஆண்டு- 9,593 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது.
தற்போதைய ஜனாதிபதியின் செலவு 290 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே முன்னெடுப்போம்.
அரச ஊழியர்களின் சம்பளம் பெப்பரவரியில் 5,000 ரூபாவால் அதிகரிக்கப்படும். ஜூன் மாதம் முதல் இன்னும் 5,000 ரூபாய் அதிகரிக்கப்படும்.
கடந்த அரசாங்கம் பெற்ற கடனை இந்த அரசாங்கம் செலுத்தவேண்டியிருக்கிறது.
தனியார் துறையின் மாதாந்த சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்க கவனம் செலுத்துமாறு கோரிக்கை.
நூறுநாட்கள் வேலைத்திட்டத்துக்கு தேவையான நிதியை திரட்ட வேண்டியுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் அரசுக்கு 5,000 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஓய்வூதியக் கொடுப்பனவு 1,000 ரூபாவால் அதிகரிக்கப்படும்.
சமுர்த்திக் கொடுப்பனவு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.
புதிதாக பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களில் தாய்மார்களுக்கு 2 வருடங்கள் வரை கொடுப்பனவு.
விவசாயிகள், வர்த்தக வங்கிகளுக்கு வழங்கவேண்டிய கடனில் 50 சதவீதம் தள்ளுபடி.
தேயிலை, இறப்பருக்கு நிவாரண விலை.
சிறிய ரக உழவு இயந்திரங்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும்.
உரமானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
தூய பால் லீற்றரொன்றுக்கு 70 ரூபாய் நிவாரண விலை.
கொழும்பு நகரில் மீண்டும் குடியேறும் மக்களுக்கு நிவாரணம்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கும் ஒதுக்கப்படும் நிதி 5 மில்லியனிலிருந்து 10 மில்லியனாக அதிகரிக்கப்படும்.
தயட்ட கிருலயில் ஊழல் மோசடி, அதை நிறுத்துவதற்கு யோசனை.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
சிறுநீரக நோயாளிகர்களின் கொடுப்பனவுக்காக 2,000 மில்லியன் ஒதுக்கப்படும்.
சுகாதாரத்துறைக்கான செலவு 3 சதவீதத்தால் அதிகரிக்கும்.
வெளி நோயாளர் பிரிவு 24 மணிநேரமும் திறந்திருக்கும்.
மண்ணெண்ணெய் விலை லீற்றரொன்றுக்கு 6 ரூபாவால் குறைப்பு. தற்போதைய விலை 59 ரூபாய்.
அத்தியாவசியப் பொருட்கள் 13இன் விலைகள் குறைக்கப்படும்.
சீனியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
400 கிலோகிராம் பால்மாவின் விலை 61 ரூபாவால் குறைப்பு
கோதுமை மாவின் விலை ரூ.12.50 குறைப்பு
நெத்தலி கருவாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்படும். இதன்மூலம் 15 ரூபாவால் குறைக்கப்படும்.
பாசிப்பயறு 1கிலோவின் விலை 30 ரூபாவால் குறைப்பு.
டின்மீன் விலை 60 ரூபாவால் குறைப்பு
கொத்தமல்லிக்கான விஷேட பண்ட வரி 30 ரூபாவால் குறையும்.
உழுந்து கிலோவொன்றுக்கு 60 ரூபாவால் குறையும்.
மேலதிக தகவல்களுக்காக காத்திருங்கள்…
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila