மக்களுக்குரிய கோடிக்கணக்கான பணம் எங்கே அதிர்ச்சிதரும் தகவல்(காணொளி)

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 2500 மில்லியன் ரூபாக்கள் உள்ளன. இதனைவிட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் 560 மில்லியன் ரூபாக்கள் வங்கியில் உள்ளன. இவற்றை 5 – 8 வீத வட்டியில் பிணையில்லாமல் அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு கடனாக பெறமுடியும். ஆனால் அவை பயன்படுத்தாமல் உள்ளது என்றும் அதனை உரிய அரச அதிகாரிகள் மனச்சாட்சிப்படி கடமையாற்றினால் மக்களின் அரைவாசிப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் மட்டு அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.
மக்கள் ,மக்கள் பிரதிநிதிகள்,அரச அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:

ஆனால் சில தொண்டு நிறுவனங்கள் 15 – 25 வீத வட்டியில் நுண்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்திவருகின்றனர். தங்கள் இயலுமைக்கு அப்பாற்பட்ட வகையில் இந்நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கமல் தெரிவிக்கின்றார்.
சிலபகுதிகளில் ஆரம்பபள்ளிகள் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சனத்தொகை பெருக்கம் எதிர்பார்த்த அளவு இல்லாததால்தான் இப்படி பள்ளிகள் மூடவேண்டிவந்துள்ளதாக அரசஅதிபர் தெரிவிக்கின்றார். அத்தோடு அவ்வாறான கலந்துரையாடல்களும் மக்களின் தேவைகளை வெளிக்கொண்டுவரும் செயற்பாடுகளும் விரைவில் வடக்கிற்கும் விஸ்தரிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொலைக்காட்சி நிகழ்வு முழுமையான காணொளி

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila