எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் அறிக்கை தாக்கல் செய்வதை 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளார். இந்த அறிக்கையில் காலம் தாழ்த்தாமல் உரியதினத்தில் அதாவது மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெளியிடவேண்டும் என்பதே எமது விரும்பமாகும். அறிக்கையை மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடுங்கள் வேண்டுமானால் அதன் உள்ளடக்கத்தை செம்ரெம்பர் மாதம் வெளியிடலாம். இதுவே எமது கோரிக்கையாகும். விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்தி, கடைசியில் அது வெளிவராமல் போவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதே எமது கருத்தாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். |
ஐ.நா அறிக்கையை அடுத்த மாதமே வெளியிட வேண்டும்! - முதலமைச்சர் விக்னேஸ்வரன்
Related Post:
Add Comments