மூன்றாம் இணைப்பு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா 1,60,921 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு என்பது பிறரை நேசிக்கச் செய்யும் பண்பு, அந்த நேசப் பண்பு அனைவரையும் அரவணைக்கும் பாசப் பண்பு. இந்த அன்பை நான் தமிழக மக்களிடத்தில் வைத்து இருக்கிறேன். அவர்களும் என் மீது வைத்து இருக்கிறார்கள். அதனால் தான், என்னுடைய அன்பான வேண்டுகோளினை ஏற்று, இந்த இடைத்தேர்தலில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெறச் செய்து இருக்கிறார்கள் எனது அன்புக்குரிய ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்கள். என்னுடைய வார்த்தைக்கு மதிப்பளித்து, என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், என்னை மகத்தான வெற்றி பெறச் செய்த எனது அன்பார்ந்த ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைத்தேர்தல் வெற்றியின் மூலம், "மக்கள் சக்தியை மட்டும் மூலதனாமக் கொண்ட இயக்கங்கள் மட்டுமே இன்று உருக்குலையாமல், துருப்பிடிக்காமல், தேய்ந்துவிடாமல், மாய்ந்துவிடாமல் அசைக்க ஒண்ணாத கோட்டை கொத்தளமாக புத்தொளி வீசுகிறது" என்று அண்ணா அன்று சொன்ன அமுதமொழி இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்காளப் பெருமக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்ப, அவர்களின் எதிர்பார்ப்புகள், தேவைகளை, வசதிகளை நிறைவேற்றித் தர தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்ற உறுதியை நான் இந்தத் தருணத்தில் அளிக்கிறேன். எனக்காக தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கும்ம் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு வாக்கு எண்ணிக்கையின் வித்தியாசம் அதிகமாகி வருவதை அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ராணிமேரி கல்லூரி முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புரட்சித்தலைவி வாழ்க என கோஷமிட்டனர். அ.தி.மு.க தலைமை கழகத்திலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முன்பும் அ.தி.மு.க தொண்டர்கள், மகளிர் அணியினர் திரண்டு வந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், செந்தமிழன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமான கட்சி பிரமுகர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மகளிர் அணியினர் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இரட்டை இலை சின்னத்துடன் தொண்டர்கள் நடனமாடினர். இதே போல் ஒவ்வொரு ஊர்களிலும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பதிமூன்றாம் சுற்று முடிவில் ஜெயலலிதா (அதிமுக) - 1,26,666 வாக்குகள் மகேந்திரன் (இ.கம்யூ.) - 7,765 வாக்குகள் பனிரெண்டாம் சுற்று முடிவில் ஜெயலலிதா (அதிமுக) - 1,18,043 வாக்குகள் மகேந்திரன் (இ.கம்யூ.) - 7,251 வாக்குகள் பதினொன்றாம் சுற்று முடிவில் ஜெயலலிதா (அதிமுக) - 1,09,182 வாக்குகள் மகேந்திரன் (இ.கம்யூ.) - 6731 வாக்குகள் டிராபிக் ராமசாமி - 3260 வாக்குகள் நோட்டா - 1680 பத்தாவது சுற்று முடிவில் ஜெயலலிதா (அதிமுக) - 98,519 வாக்குகள் மகேந்திரன் (இ.கம்யூ.) - 6,269 வாக்குகள் டிராபிக் ராமசாமி - 2,939 ஒன்பதாவது சுற்று முடிவில். ஜெயலலிதா (அதிமுக) - 87,026 வாக்குகள் மகேந்திரன் (இ.கம்யூ.) - 5,941 வாக்குகள் எட்டாவது சுற்று முடிவில் ஜெயலலிதா (அதிமுக) - 76,858 வாக்குகள் மகேந்திரன் (இ.கம்யூ.) - 5,417 வாக்குகள் டிராபிக் ராமசாமி - 2,492 வாக்குகள் 7வது சுற்று முடிவு ஜெயலலிதா (அதிமுக) - 67,899 மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) - 4,876 டிராபிக் ராமசாமி (சுயேட்சை)- 2,52 நோட்டா (யாருக்கும் வாக்கு இல்லை) - 978 7வது சுற்று முடிவில் இ.கம்யூ. வேட்பாளர் மகேந்திரனைவிட அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 63,023 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 6வது சுற்று முடிவு ஜெயலலிதா (அதிமுக) - 58,297 மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) - 4,349 டிராபிக் ராமசாமி (சுயேட்சை)- 1,120 6வது சுற்று முடிவில் இ.கம்யூ. வேட்பாளர் மகேந்திரனைவிட ஜெயலலிதா 53,948 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 5வது சுற்று முடிவு ஜெயலலிதா (அதிமுக) - 49,000 மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) - 3,713 டிராபிக் ராமசாமி (சுயேட்சை)- 875 5வது சுற்று முடிவில் இ.கம்யூ. வேட்பாளர் மகேந்திரனைவிட ஜெயலலிதா 45,287 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்று முடிவு: ஜெயலலிதா (அதிமுக) - 9, 562 மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) - 930 டிராபிக் ராமசாமி (சுயேட்சை) - 280 நோட்டா (யாருக்கும் வாக்கு இல்லை) - 174 முதல் சுற்று முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரனை விட 8,632 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். 4வது சுற்று முடிவு ஜெயலலிதா (அதிமுக) - 38,806 மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) - 2,809 டிராபிக் ராமசாமி (சுயேட்சை) - 543 4வது சுற்று முடிவில் இ.கம்யூ. வேட்பாளர் மகேந்திரனைவிட அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 35,997வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 3வது சுற்று முடிவு ஜெயலலிதா (அதிமுக) - 30, 329 மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) - 2,297 3வது சுற்று முடிவில் இ.கம்யூ. வேட்பாளர் மகேந்திரனைவிட ஜெ. 28,032 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது சுற்று முடிவு ஜெயலலிதா (அதிமுக) - 20, 398 மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) - 1,647 2வது சுற்று முடிவில் இ.கம்யூ. வேட்பாளர் மகேந்திரனைவிட ஜெ. 18,751 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா...பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக (வீடியோ இணைப்பு)
Related Post:
Add Comments