ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து தான் அன்றைய தினம் பார்த்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலமா மாளிகையில் இன்று வழிபாட்டில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அதன்பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார்.
அதன்போது மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை அக்கட்சியின் சார்பில் வேட்புமனு வழங்கப்படப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டு வரும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்குப் பதிலளிக்கும் போதே மகிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கட்டாயம் போட்டியிடுவார் என்றும் அவர் போட்டியிடும் கூட்டமைப்பிலேயே தே.சு.மு.வும் இணைந்து போட்டியிடும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்.