தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முறுகல் நிலையை ஏற்படுத்த ரணில் முயற்சி – அனந்தி சசிதரன்

கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு பிரதமர் ரணில்  முயற்சிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தொலைகாட்சி ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:பதிவு இணைய செய்தி

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக சிறிலங்க அரசாங்கத்தினுடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அவர்களுடைய பங்களிப்பு கூடுதலாக இருப்பதாக நங்கள் அவதானிக்கின்றோம்.

அவருடைய அந்த அறிவுறுத்தலின்   பிரகாரம்  ஆளுநர் ஊடக இந்த முதலமைச்சு  பதவி  வாழங்கப்பட்டதாக அறிகின்றோம்.

ஏற்கனவே நங்கள் கூறினோம்   முஸ்லிம்களும் , தமிழர்களும் ஒன்று பட முடியாத ஒரு மனக்கசப்பு இருந்த நேரத்தில் ஒன்று படுவார்கள் என்ற நம்பிக்கையில் நங்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில். மீண்டும் இந்த  ரணில் விக்கிரமசிங்க  அவர்களுடைய தலையீடு தமிழர் ,  முஸ்லிம்ளை பிரிக்கிற ஒரு நிலைமைக்கு இட்டு சென்று இருக்கிறது. பதிவு இணைய செய்தி

நங்கள் ஆரம்ப காலத்திலே எச்சரித்து இருந்தோம் இந்த  பிரதமர் மிகவும் மோசமான ஒரு நிலைமையை எங்கள் மத்தியில் தமிழர்கள் தரப்பில் உருவாக்குவர் என்று நங்கள் கூறி இருந்தோம் அது இன்று கண்கூடாக நடந்து கொண்டு இருப்பதையும் அவதானித்து கொண்டு இருக்கின்றோம். என்று தெரிவித்தார்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila