பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஜெயக்குமாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டு காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமில் சுமார் ஒரு வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
எனினும் ஜெயகுமாரி கடந்த வாரம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று கொழும்பு நீதிவான நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிவரை சிறைச்சாலையில் தடுத்துவைத்திருப்பதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார். -
இதேவேளை, தனது தாயாரை விடுதலை செய்யாது விடில் நஞ்சருந்தி தற்கொலை செய்வேன் என மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.