தேசியப் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை மாணவர் அனுமதியின் போது பணம் பெற்றுக்கொண்ட பத்து அதிபர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பாடசாலை மாணவர் அனுமதியின் போது பணம் பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற சுற்று நிருபத்தை மீறி சில அதிபர்கள் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர் அனுமதிக்காக பணம் பெற்றுக் கொள்வதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, இசிதபன வித்தியாலயம் கொழும்பு, மஹிந்த ராஜபக்ஸ வித்தியாலயம் ஹோமாகம, அனுரா வித்தியாலயம் நுகோகோடை, சங்கமித்த மகளிர் பாடசாலை, சவுத்லேண்ட் மகளிர் பாடசாலை காலி, நுகவெல மத்திய மஹா வித்தியாலயம், உதின் தேசிய பாடசாலை கண்டி, ராஹ_ல வித்தியாலயம் மாத்தறை, விஹார மஹாதேவி வித்தியாலயம் கிரிபத்கொட ஆகிய பாடசாலைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.