வவுனியா, செட்டிக்குளம் – உளுக்குளம் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது என்ற செய்திமட்டுமே வந்துள்ளது. யார் சுட்டார்கள் , எதற்காக சுட்டார்கள் என்ற செய்தி இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை இந்தப் பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது. ராணுவத்தினர் வரவளைக்கப்பட்டு அங்கே மீண்டும் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிர்வின் வன்னி சிறப்பு நிருபர் சில தகவல்களை எமக்கு வழங்கியுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி காலில் தான் குறிபார்த்து சுட்டுள்ளார்கள்.
இதனால் அவருக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர் உடனடியாகவே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் சுட்டவர்கள் எம்-டீ--கப் என்று சொல்லப்படும் தோட்டாவின் கோதையும் நிதானமாக நின்று எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று அறியப்படுகிறது. இதனால் எந்த ஒரு தடையத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. இதேவேளை வன்னி பகுதியில் ஆயுத கும்பலின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்று காட்டும் ஒரு நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறித்த பகுதியில் ராணுவத்தினரும் நடமாடுவது வழக்கம். ஆனால் அவர்களை நோக்கி எவரும் சுடவில்லை. சுட்டிருந்தால் ராணுவம் சும்மா விட்டிருக்காது. சுட்டவரை நோக்கி தாக்குதல் நடத்தி இருக்கும்.
எனவே இச்செயலானது இயல்பு வாழ்க்கையை குலைக்கவும் , மேலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. அல்லது புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று ஒரு புரளியைக் கிளப்பும் சித்துவிளையாட்டே என்று அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளார்கள். இதனூடாக யாருக்கு என்ன லாபம் என்று நீங்கள் கேட்க்கலாம். மகிந்தர் பகுதி செய்திருந்தால் மைத்திரி ஆட்சியில் புலிகள் மீண்டுவருகிறார்கள் என்று கூறுவார்கள். மைத்திரி பகுதி இதனை செய்திருந்தால் ராணுவம் வட கிழக்கில் ஏன் நிலைகொள்ளவேண்டும் என்று காரணம் கூறுவதற்காக இருக்கலாம் என்கிறார்கள். என்ன நடந்தது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.