
வடமாகாணசபையில் என்ன குழறுபடிகள்
இடம்பெறுகின்றது என்பதை நேற்று கிளிநொச்சியில் வெளிச்சம் போட்டு காட்டிகார் வடமாகாணசபை உறுப்பினர் திரு பசுபதிப்பிள்ளை அவர்கள்.
கடந்த வடமாகாணசபை அமர்வில் நடைபெற்ற சம்பவங்கள் அதன்போது முதல்வர்மீதும் குறிப்பாக விவசாய அமைச்சர் மீதும் ஆளும்கட்சிகளின் ஒன்றான புளட் கட்சியை சேர்ந்த திரு லிங்கநாதன் அவர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான சயந்தன்,ஆனல்ட்,சுகிர்தன் ஆகியோரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே மாகாணசபை உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இது ஒருசிலரின் திட்டமிட்ட செயற்பாடே காரணமெனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று முந்தினம் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த செய்தி |
அவர் மேலும் தனது உரையில் தெறிகில் மகிந்த ராஜபக்சே நடாத்திய ராஜக ஆட்சி 6 ஆண்டுக்குள்ளேயே எப்படி மாறியது அது அவர்செய்த கொடுமைக்கு ஆண்டவன் கொடுத்த தீர்ப்பு என்றும். ‘‘ அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் ‘‘ அதுபோல வடக்கிலும் சிலர் வடமாகாணசபையை குழப்பும் நோக்குடன் செயற்பட்டு வருவதாகவும் ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சரோ சிறப்பாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்ததோடு அன்றைய தினத்தில் தான் மௌனமாக இருந்தமைக்காக கவலைப்படுவதாகவும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
தினக்குரலில் வந்த மேற்படி காருத்துப்படம் இதை யார் சொல்லியிருப்பார்? |