அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்துவதுவதில் கோத்தாபய- கபில ஹென்தவிதாரணவுக்கு நேரடி தொடர்பு

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்துவதுவதில் கோத்தாபய- கபில ஹென்தவிதாரணவுக்கு நேரடி தொடர்பு:


அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்துவது குறித்து எழுந்த சர்ச்சைக்கு இலங்கை கடற்படையினரே காரணம் என்பது தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது

இலங்கையின் இராணுவபுலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர்ஜெனரல் கபில ஹென்தவிதாரண முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்பது விசாரணைகளின் மூலமாக அம்பலமாகியுள்ளது.

இந்த நடவடிக்கை பொறுப்பாக செயற்பட்டவர் கடல் புலனாய்வு பிரிவின் அதிகாரி கே .சி வெலெகெதர என்பதும் தெரியவந்துள்ளது. அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேற முயல்வதாகவும்,அவரிற்கு அவுஸ்திரேலிய தூதரகம் விசா வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கபில ஹென்தவிதாரண திருமதி கோத்தாபய ராஜபக்ஸ
2012 முதல் 13 வரை அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 120 படகுகள் புறப்பட்டுச் சென்றுள்ளன. ஓரு படகில் சுமார் 100 முதல் 150 பேர்வரை பயணம் செய்துள்ளனர்.அனேகமானவர்கள் தமிழர்கள் என்பதுடன் அவர்கள் தலா ஓரு மில்லியனை வழங்கியுள்ளனர்.

நேவியுடனான ஓப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று படகுகளை சாதாரண படகோட்டிகள் செலுத்தியுள்ளனர். கபில ஹென்தவிதாரண, கடற்படை புலனாய்வு பிரிவின் தலைவர் நிசாந்த உலுகெட்டென்ன, அவருக்கு அடுத்த நிலையிலுள்ள பிரசன்ன ஹேவகே, கே .சி வெலெகெதர ஆகியோர் இதன் மூலமாக 130 மில்லியன் வரை பணம் சம்பாதித்துள்ளனர்.

தங்களுடைய தலைமை அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பது தெரியாத கடற்படையினர் 63 மேற்பட்ட படகுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். உஸ்வெட்டகெய்யாவ முகாமைசேர்ந்த லெப் ஜெயக்கொடி 2012 இல் நீர்கொழும்பிலிருந்து புறப்படவிருந்த 5 படகுகளை தடுத்து நிறுத்தியுள்ளார். அதற்காக அவர் பின்னர் கண்டிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கடற்படையில் இந்த ஆள்கடத்தல் கும்பல்கள் அதிக செல்வாக்குடன் விளங்கியதன் காரணமாக படகுகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை அவர்கள் ஒரிருநாட்களிற்குள் இடமாற்றம் செய்தனர். கடற்படை தளபதிக்கு இது குறித்து தெரிந்திருந்தாலும் அவரும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கபில ஹென்டவிதாரணவிற்கும் கோத்தபாயவிற்குமான தொடர்புகள் குறித்து அவர்கள் அறிந்திருந்ததே இதற்கு காரணம்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila