மனித படுகொலை இடம்பெறவில்லை அடித்து கூறும் சரத் பொன்சேகா


news
வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக அரசியல் நன்மைகளை  பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவர் அவ்வாறு செய்வது நியாயமற்றது.

தரைவழி போரை நானே வடிவமைத்து திட்டமிட்டேன், படையணிகளுக்கு நானே உத்தரவு பிறப்பித்தேன். கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு நானே ஆணை வழங்கினேன். இந்த போராட்டத்தை நன்றாக கண்காணித்தேன். எனவே, மனித படுகொலைகள் இடம்பெறவில்லை என்பது எனக்குத் தெரியும்.

சிவில் மக்களை பாதுகாக்க நாம் முன்னின்று செயற்பட்டோம். 275,000 மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தோம்.

சிவில் போர்களின் போது பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என்ற போதிலும் எல்லா காரணிகளையும் கருத்திற் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில் போர் செய்தோம்.

ஆனால் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அது பிழை. நான் அதனை அவருக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.அவர் வடக்கு மக்களின் நலனில் கரிசனை கொண்டிருந்தால், தெற்கு மக்களின் மனதில் சந்தேகம் எழுக்கூடிய வகையில் செயற்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila