நேற்றைய தினம் முல்லைத்தீவு நகரில் நடைபெற்ற காணாமல் போனவர்களின் உறவினர்களுடைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முல்லைத்தீவு- முள்ளியவளையை சேர்ந்த விவேகானந்தன் ஜெயலிங்கேஸ்வரி என்ற தாயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
2009ம் ஆண்டு 3ம் மாதம் 27ம் திகதி எனது மகளை மாத்தளன் பகுதியில் வைத்து காணாமல்போனாள். அதன் பின்னர் 2009ம் ஆண்டு 5ம் மாதம் 10ம் திகதி படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் சென்றிருந்த போது என்னுடைய மகளை காயமடைந்த நிலையில் படையினர் கொண்டு செல்வதை நான் பார்த்தேன்.
என்னுடைய மகள் (வி.தனோஜா) என்னைக் கண்டு கூப்பிட்டாள். ஆனால் என்னால் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் என்னுடைய மகளை நான் எங்கேயும் காணவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரத்தில் என்னுடைய மகளும் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
என்னுடைய மகளை தயவு கூர்ந்து மீட்டுக் கொண்டுங்கள் என அந்த தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.