கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசை அமைக்கும் ஹக்கீமின் அழைப்பை பரிசீலிப்பதாக கூட்டமைப்பு தலைவர்இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையினில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முயற்சி செய்வேன் என்று கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் உறுதியளித்துள்ளார்
கிழக்கு மாகாண முதலமைச்சராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: தமது செயற்பாடுகளில் இன, மத பாகுபாடுகளின்றி மூவின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் சமத்துவமான சேவையை நாம் வழங்குவோம்.;. இந்த முதலமைச்சர் பதவியை தமக்கு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இதன்போது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
எனினும் தேசிய அரசு அமையுமிடத்து தமக்கு இரண்டு அமைச்சுப்பதவிகளை தருமாறு கூட்டமைப்பு வலியுறுத்திவருவதாக தெரியவருகின்றது.
Add Comments