ஜெனீவாவில்
தங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் ஜெனீவா நீதிமான்களின் அரங்கு என்றும்
தமிழர்கள் கற்பனை செய்யக் கூடாது என ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான
நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல. அங்கே
தமிழர்களின் இரத்தத்தைப் பற்றியும் காயங்களைப் பற்றியும் துயரங்களைப்
பற்றியும் தான் உரையாடுகிறார்கள்.
தமிழர்களைப் பற்றித் தான் அங்கே எல்லாம் நடக்கின்றது. ஆனால் அங்கே தமிழர்கள் ஒரு தரப்பு அல்ல. இது தான் ஜெனீவாவின் மெய்நிலை.
அது தமிழர்களுக்கான அரங்கு அல்ல. ஐ.நா எனப்படுவது அரசுகளின் அரங்கு.
சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு தமிழர்கள் அங்கே துருப்புச் சீட்டுக்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டு அங்கு ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
சீனாவுக்கு விசுவாசமான சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து, அதன் வெளியுறவுக் கொள்கையில் சீனாவுக்குச் சார்பான நிலவரங்களில் வரையறைகளை ஏற்படுத்துவதற்காக தமிழர்களின் விவகாரம் ஒரு அழுத்தப் பிரயோக உத்தியாக சக்தி மிக்க நாடுகளால் கையாளப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.