பியசிறி விஜேநாயக்கவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது த.தே.கூ


news
வடக்கில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்களை மீளவும் இலங்கையில் குடியமர்த்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்து சென்றவர்களை வடக்கில் மீளக் குடியமர்த்துவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து 1970 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோத படகுகளில் வந்து குடியேறியவர்களே தமிழீழ விடுதலைப்புலிகள் இயங்கத்தை வலுப்படுத்தினர்கள்.

இன்று மீண்டும் இந்தியாவிலிருந்து வருபவர்களை குடியமர்த்துவதால் தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டிவரும்.

குறிப்பாக ஒவ்வொரு நாட்டிலும் வெளிநாட்டவர்கள் உள்நுழைய முடியாத தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பிரதேசங்கள் உள்ளன. அதே போன்று இலங்கையிலும் வடக்கு பிரதேசம் இருந்தது.

தற்போது வெளிநாட்டு ஒற்றர்கள் எல்லா இடங்களுக்கும் செல்லக் கூடிய வகையிலும், கெலம் மெக்கரே திரைப்படம் எடுக்கக் கூடிய வகையிலும் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அது மட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகளின் அதிகாரிகள் சுதந்திரமாக எல்லா பிரதேசங்களுக்கும் சென்று தமக்கான தகவல்களை பெறும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவில் இருக்கின்ற தமிழர்களை இங்கே வடக்கில் குடியமரச் செய்வதுடன், அகதிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலரையும் வடக்கின் குடிசன எண்ணிக்கையுடன் சேர்க்கும் முயற்சி இடம்பெற்றுவருவதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பியசிறி விஜேநாயக்க இந்த கருத்தை வெளியிட்டார்.

இவருடைய இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து சென்றவர்களை மீளவும் இலங்கையில் குடியமர்த்துவது அரசின் பொறுப்பு என தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila